Thursday 21 January 2016

ஒரு சிலருக்கு தன்னை அறியாமல் பயம் வரக்காரணம் என்ன?

ஒரு சிலருக்கு தன்னை அறியாமல் பயம் வரக்காரணம் என்ன?

ஒரு சிலருக்கு தன்னை அறியாமல் அடிக்கடி பயம் வர காரணம் அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் பதிவுகளே...ஆம்
சிறுவயதில் இருந்தே அவர்கள் கேட்டு வளர்ந்த பேய் கதைகளும், பார்த்த இறப்புக்களும், பிரிந்த உறவுகளும், தோல்வி அடைந்த உணர்வுகளும், எப்போதும் குறையே கூறும் மனிதர்களின் நட்பும்  அவர்களின் ஆழ்மனதில் பதிவாகி இருப்பதே இதற்க்கு காரணம். ஆழ்மனதிற்கு நன்மை, தீமை என்ற வித்தியாசம் தெரியாது.. சட்டியில் இருப்பது அகப்பையில் வருவது போல ஆழ்மனதில் இருப்பது தன் நினைவாக, செயலாக, சுபாவமாக  மாறி வெளியே வருகிறது. இதனால் அவர்களுக்கு எப்போதும் மனம் அமைதியாக இருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பயந்து பயந்தே வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். தன்னிடம் இருக்கும் நிறையான விஷயங்களை இவர்கள் எப்போதும் உணர மாட்டார்கள். தன்னிடம் எந்த குறை இல்லை என்றாலும் ஏதோ எப்போதும் தன்னிடம் குறைவதாகவே இவர்கள் கருதுவார்கள். இவர்களிடம் எப்போதும் பிற்போக்கு சிந்தனையே ஓங்கி இருக்கும். மொத்தத்தில் இவர்கள் மூளையை அடுத்தவரிடம் எப்போதும் அடகு வைத்து விடுவதே இதற்க்கு காரணம்.
இவர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றம் வேண்டும் என்றால் நிறைய சாதித்தவர்களின் புத்தகங்களை நாள்தோறும்  படிக்கவேண்டும். நல்ல முற்போக்கான சிந்தனை உடையவர்களுடன் அடிக்கடி பழகவேண்டும். ஒவ்வொரு நாளும் தன்னிடம் எது எல்லாம் இல்லையோ அதை பற்றி யோசிக்காமல் தான் எப்படி வாழவேண்டும் என்று ஆசை படுகிறோமா அதன் மேல் அதிக கவனம் செலுத்தவேண்டும். பிற்போக்கு சிந்தனை உடையவர்களின் நட்பில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்

1 comment: