Friday 22 January 2016

குழந்தை வளர்ப்பு முறை



குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை  வளர்க்கும்போது  அவர்கள் செய்யும் செயல்களை கவனித்து அவர்கள் எந்த விஷயத்தில்  ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அறிய வேண்டும். பிறகு அந்த செயல் அக்குழந்தைக்கும் சமுதாயத்திற்கும் நண்மை தரும் விசயமாக  இருந்தால் குழந்தையை உற்சாக படுத்தி வளர்க்க வேண்டும்.  அப்போது உங்கள்  குழந்தை  நிச்சயம்   சாதனையாளராக  ஒரு  நாள்  உருவாவான். நடைமுறைகாலங்களில்  பெற்றோர்  குழந்தைகளை  எப்போதும்  குறை  கூறிக்கொண்டே வளர்க்கின்றனர். இதனால்  பெரும்பாலான  குழந்தைகள்  தன்னம்பிக்கையை  இழந்து வளர்கின்றனர். உதாரணமாக  ஏழு  வயது  குழந்தை  ஒருவன்  சரியாக  சாப்பிடவில்லை என்றால்  அந்த குழந்தையின்  பெற்றோர்  அவனுக்கு  பேய்  கதைகளை, ஒற்றை கண்ணு பூதம் இருக்கிறது, ரத்த காட்டேரி வருகிறது போன்ற கதைகளை சொல்லி சொல்லி பயமுறுத்தி  உணவை  ஊட்டுகின்றனர்.   இதனால்  குழந்தை பயத்தினாலே உணவை உண்கிறது.  உதாரணமாக  குழந்தைக்கு  சுமார்  7  வயது  ஆகும்  நேரத்தில்   அந்த குழந்தை  தன்  பெற்றோரிடம்  விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற ஆசையினாலே பைனாகுலர்  வேண்டும் என்று கேட்கின்றது குழந்தை பெற்றோர் வாங்கி தந்த  பைனாகுலரை  வைத்து  இரவில் வானத்தில் இருக்கும் அழகழகான நட்சத்திரங்களையும்  கிரகங்களையும்  பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென்று தன் பெற்றோர்  சொன்ன  பேய்  கதைகள்  அந்த குழந்தைக்கு   ஞாபகம் வந்து விடுகின்றது. உடனே அக்குழந்தை  தன்  கையில்  இருந்த  பைனாகுலரை கீழே போட்டு விட்டு பயந்து வீட்டுக்குள் ஓடி  விடுகிறது.  குழந்தைக்கு  விஞ்ஞானி  ஆகும்  கனவு  கானல் நீராகி போகிறது. வாழ்க்கையில் அந்த குழந்தை எப்போதெல்லாம் விஞ்ஞானி ஆகும் கனவு வருகின்றதோ அப்போதெல்லாம் பெற்றோர் சொன்ன பேய் கதைகள் ஞாபகம் வந்து  பயம்  வந்து விடுகிறது.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த குழந்தையின் கனவு நிறைவேறாமல் போகிறது. இக்குழந்தையின் தன்னம்பிக்கையில் விஷம் என்னும் பயத்தை ஏற்றியது குழந்தையின்  பெற்றோரே. பெற்றோர்கள் குழந்தைக்கு உணவு ஊட்டும்போது குழந்தை நலமாக இருக்க வேண்டும் என்று தான் பேய் கதைகளை சொல்லி ஊட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை குழந்தை சாதிக்க முடியாமல் போவதற்கு மறைமுகமாக பெற்றோரே காரணம் என்றுபெற்றோர் தயவுசெய்து இனிமேலாவது குழந்தைகளுக்கு பேய் கதைகளை சொல்லி வளர்க்காதீர்கள்.

குழந்தைகளை வளர்க்கும் போது குழந்தை செய்யும் செயலில் தவறு இருப்பின் அதை சுட்டிகாட்டி கொண்டே இல்லாமல் அந்த தவறை திருத்தி கொள்ளும் வகையில் அன்பாக அறிவை புகட்டி  அவர்களை எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொடுத்து உணர வையுங்கள். பெற்றோர் குழந்தைகள் கல்வியில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அதை அடுத்த  மாணவருடன்   (compare)  சமம் செய்து சுட்டிக்காட்டாமல் உன்னால் முடியும் நீ நிச்சயம்  நல்ல  மதிப்பெண்  எடுப்பாய்.. நீ நிச்சயம்  ஒரு  நாள்  சாதிப்பாய்  என்று  தட்டி  கொடுத்து அவர்களின் தன்னம்பிக்கையை, வளர்த்தீர்களானால்  நிச்சயம் உங்கள் குழந்தை மிக பெரிய சாதனையாளன்  ஆவது திண்ணம்.

குழந்தைகளின் தன்னம்பிக்கை என்பது ஒரு சிறு விதை போன்றது. அந்த தன்னம்பிக்கை என்னும் விதையை பெற்றோர்கள் முற்போக்கு சிந்தனை (positive mind ) என்னும்  நிலத்தில் விதைக்கவேண்டும். உங்கள் குழந்தை விதை என்னும் தன்னம்பிக்கையுடன் துளிர் விட்டு வளரும் போது ஆடு மாடு போல இருக்கும் பிற்போக்கு சிந்தனையை     (negative mind )   உடைய சமுதாயம்  அந்த தன்னம்பிக்கை என்னும் விதையில் இருந்து வந்த துளிரை  மேயவரும்.  ஆனால்  பெற்றோர்  ஆகிய  தாங்கள்  முற்போக்கு  சிந்தனை  என்னும்  வேலி  போட்டு குழந்தையின்  தன்னம்பிக்கையை  காத்து  வளர்த்து  வர  வேண்டும்.  நாளாக  நாளாக குழந்தையின்  தன்னம்பிக்கை என்னும் விதை வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து மிக பெரிய ஆல மரமாக வளர்ந்துவிடும்.  இப்போது மேய வந்த ஆடு மாடுகளும் மரத்திற்கு அடியில் வந்து  நிழலுக்கு இளைப்பாறும்.

அது போலவே குறை கூறிய சமுதாயமும் அந்த மரத்திற்குஅடியில் வந்து இளைபாருவதை போல குழந்தையின் வளர்ச்சியை பார்த்து வியப்படைவார்கள். ‘அவரை’ விதையும் சிறியது தான் ‘ஆல’ மர விதையும் சிறியது தான். ஆனால் அந்த சிறிய  விதைக்குள் தான்  அவ்வளவு பெரிய ஆலமரம் இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதே போல் குழந்தைக்கு நாம் கொடுக்கும் அந்த சின்ன சின்ன தன்னம்பிக்கையில் தான் குழந்தை அடைகின்ற அவ்வளவு பெரிய சாதனை இருக்கின்றது.


No comments:

Post a Comment