Thursday 26 November 2015

சிவபிரம்மம்!

சிவபிரம்மம்!

என்னுடைய தாத்தா திரு. சிவ சிதம்பர கருணாநிதி ஜோதிட வல்லுநர். அவருடைய பூர்விகம் காஞ்சிபுரம். மிக சிறந்த பாரம்பரிய ஜோதிடர்.

அவர் வழியில் எனது தந்தை பம்மல் திரு.M S சுப்பிரமணியன் அவர்களும் ஒரு சிறந்த ஜோதிடர். இதை எழுதும்போது அவருடைய வயது  97.  இவர் பல தினசரி நாளேடுகளுக்கும். புத்தகங்களுக்கும்   கதை, கவிதை, கட்டுரை எழுதியுள்ளார். இவர் மிக சிறந்த மேடை பேச்சாளர். அவருக்கு திருக்குறள் சுப்பிரமணியன் என்ற பேரும் உள்ளது.

எனது தந்தை வழியில் M S சிவகுமார் B.A.(Corp). pcp   ஆகிய நானும் கடந்த 15  வருடங்களாக ஜோதிட துறையில் இருந்துவருகிறேன். இந்த ஜோதிட வழியில் நான் கற்றுக்கொண்ட முற்போக்கான விஷயங்களை கலந்து மக்கள் பயன்பெறும் வகையில் எளிமையான பரிகாரங்களும், இறைவழிபாடும், பெயர் மாற்றங்களும், ஆயுள் முழுதும் அணியக்கூடிய ராசிகற்களும், வாஸ்து முறைப்படி வீடு அமைத்து வாழும் விதமாக பயனுள்ள முறையில் ஜாதகம் மற்றும் நியூமராலஜி பலனை அறிவியல் சார்ந்த ஆன்மிக உணர்வுடன்  வழங்கி வருகிறேன்.
எனது இந்த புனித பயணத்தை  எனது குருமார்களின் ஆசியும், எனது உயிரினில் கலந்த எனது தாயின் சூட்சுமுமான உயிரின் அன்பான  ஆசிர்வாதத்தினாலும் எனது தந்தையின் அறிவினானாலும், எனது நல்ல நண்பர்களின் பேராதரவுடன் தொடங்குகிறேன்.

நல்ல எண்ணம்...நல்ல சொல்... நல்ல செயல்....

    

Monday 23 November 2015

அன்பு



"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது".
"
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உடையார் பிறர்க்கு".
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அன்பை எதிர்பார்கின்றனர் ஆனால் நாம் அன்பை கொடுக்கவே பிறந்திருக்கின்றோம். ஒருவருக்கு அன்பை எதிர்பார்த்து அது கிடைக்காத நேரத்தில் ஏக்கம் வருகிறது. நாளடைவில் ஏக்கம் ஏமாற்றமாக மாறுகிறது. அந்த ஏமாற்றம் கவலை ஏற்படுத்துகின்றது. அந்த கவலை கோபத்தை உருவாக்குகிறது. நாள் பட்ட கோபம் வஞ்சத்தை உருவாக்குகிறது. இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவாக்குகிறது. இந்த கருத்து வேறுபாட்டால் குடும்பத்தில் பிரிவினை ஏற்படுகின்றது. இந்த பிரிவினை உயர்வு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இந்த மனப்பான்மையால் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போகிறது. 
நாம் மற்றவரிடத்தில் அன்பை எதிர்பார்க்காமல் அன்பை கொடுக்க பழகிகொண்டால் அந்த அன்பு மற்றவருக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதனால் நமக்கு மன நிறைவு ஏற்படுகின்றது. நாம் அன்பை எதிர்பார்க்காமால் மற்றவருக்கு அன்பை கொடுப்பதால் நமக்கு ஏக்கம் வர வாய்ப்பில்லை. ஏக்கம் இல்லாததால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.இதனால் கவலை இல்லை. கவலை இல்லாததால் கோபம் இல்லை. கோபம் இல்லாததால் வஞ்சம் இல்லை. வஞ்சம் இல்லாததால் கருத்து வேறுபாடு இல்லை. இதனால் பிரிவினை இல்லை. இதனால் உயர்வு தாழ்வு மனப்பான்மை இல்லை. இதனால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

அம்மா

அம்மா ... உனக்கு நிகர் இவ்வுலகில் எதுவும் இல்லை. நீ இல்லாத போது இதை உணர்கிறேன் அம்மா
என் அம்மா ..பொறுமையின் மறு உருவம்
அனைத்தும் நீயே என்று நினைத்த காலங்கள் மாறி போயின ....
பள்ளிக்கு செல்லும் போதும் திரும்பி வரும் வரை எப்போதும் உன் ஞாபகம் .,.....
கருவறையில் உன் காற்றை சுவாசித்து
நீ உண்ட உணவை உண்டு
உன் உதிரத்தில் இருந்து பிரியும் பாலை உண்டு
உன் அன்பை சதா சர்வ காலமும் பெற்று
பசிக்கு உனக்கு சோறு இல்லாத  நேரத்திலும் எங்கள் பசியாற்றி
படிப்பை முடித்து, பட்டதாரி ஆகி, பணியில் சேர்ந்து சம்பளம் வாங்கி
அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பணம் பண்ணி மகிழ்ந்த காலங்கள் மறைந்து போயின அம்மா
சிறு வயதில் உனக்கு மார்பு வலி அடிக்கடி எடுக்கும் போதெல்லாம்
என் உடல் முழுதும் பயம் கவ்வி கொண்டு நீ இல்லாத இந்த உலகத்தையே வெறுத்த காலங்கள் ஏராளம்.
நீ இல்லையேல் நான் இல்லை என்ற காலம் மாறி போனது அம்மா
இன்று நீ என்னுடன் இல்லை அம்மா
நீ என்னை விட்டு பிரிந்து ஒரு வருடம் ஓடிவிட்டன அம்மா
 ... ஆம் உன் உடல் தான் இல்லை
ஆனால் ஒவ்வொரு நொடியும் நீ என்னுடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறாய் அம்மா..
உயிர் அழிவதில்லை. உன் உயிர் என்னுடனே கலந்து விட்ட நினைவில்... நம்பிக்கையில்...
என்றும் உன் அன்பை மறவா உன் ஆசை மகன்....
நீ நினைத்த வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறேன் அம்மா 
நீ வாழ்ந்த பொறுமையை கடைபிடிக்கிறேன் அம்மா
யாருக்கும் தீங்கு நினைக்காத உன் உள்ளத்தை பின்பற்றுகிறேன் அம்மா ...
நல்லதை சொல்கிறேன்... நல்லதை செய்கிறேன்.. நல்லவனாக வாழ முயற்சிக்கிறேன் அம்மா...
உன் பிரிவால் வாடாமல் உன் வார்த்தையை வேத வாக்காக நினைத்து என் உயிர் இருக்கும் வரை அனைவருக்கும் நல்ல ஆற்றல் கொடுக்கும் மகானாக இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ உன் ஆசிர்வாதத்துடன் முயற்சிக்கிறேன் அம்மா..
"வேதம் சொல்லாததை மரணங்கள் சொல்லும்"

அழகு



நம் அழகை அடுத்தவர் நம்மை ரசிப்பதாலும். வர்ணிப்பதாலும் ஏற்படும்    'அழகு உணர்வு'  தற்காலிகமானது .......
நம் அழகை நமக்கு நாமே ரசிப்பதால் ஏற்படும் 'அழகு உணர்வு' நிலையானது........
நம் அழகை ஆயிரம் பேர் ரசித்தாலும் நாம் நம் அழகை உணரவில்லையெனில், ரசிக்கவில்லையனில் அது நிச்சயம் "அசிங்கமான அழகு" ....

கொஞ்சம் சீரியசாக நினைத்து பாருங்கள்



"என்ன வாழ்க்கை..1 நிமிடம் .கொஞ்சம் சீரியசாக நினைத்து பாருங்கள் "
*ஒரு பக்கம் பணம், பேர், புகழ், அந்தஸ்து நோக்கி நாம் ஓடிகொன்டிருக்கிறோம்.
*
மறு பக்கம் நம்முடன் வாழ்ந்த நண்பர்கள், உறவினர்கள், மூத்தவர்கள் *நம்மை விட்டு இறந்து மறைந்துகொண்டே இருக்கிறார்கள்.
*
நமக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது...
*
நமது உடல் அழிந்தாலும் .. உயிர் அழியாது..
*
உயிரின் சான்றாக அறிவு...
அறிவோடு நல்ல முற்போக்கு சிந்தனையை வளர்த்து நமக்கும், அடுத்தவருக்கும் பயன்படி வாழ்ந்தால் நாம் அழிந்தாலும் அந்த "அறிவு" பேச்சாலும், எழுத்தாலும், அனுபவத்தாலும், நமது குழந்தைகள், நண்பர்கள், நம் பழகிய சமூகத்தினர் மூலமாக வாழ்ந்துகொண்டே இருக்கும்

Wednesday 25 March 2015

அதிருப்தியாளர்கள்


ஒரு ஊரில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.
அது துறவியிடம் சென்று பூனை தொல்லை தாங்கவில்லை ஆகையினால் என்னை பூனையாக மாற்றிவிடுங்கள் சுவாமி என்று வேண்டிகொண்டது.
அதே போல் எலியை பூனையாக மாற்றிவிட்டார் துறவி.
மறுபடியும் பூனையாக மாறிய எலி நாய் தொல்லை தாங்கவில்லை என்றும் தன்னை நாயாக மாற்றுமாறும் துறவியிடம் சென்று வேண்டி கொண்டது.
பிறகு நாயாக மாறிய தன்னை மாடு முட்டுகிறது என்றும் தன்னை மாடாக மாற்றுமாறும் வேண்டியது.
பிறகு புலியால் மாட்டிற்கு ஆபத்து என்று புலியாக மாற்ற வேண்டிகொண்டது.
பிறகு புலிக்கு வேட்டைகார மனிதனிடம் இருந்து ஆபத்து என்று மனிதனாக வேண்டி மனிதனாக அந்த எலி மாறியது.
கடைசியில் மனிதனாக மாறிய எலி மறுபடியும் துறவியிடம் சென்று சுவாமி மற்ற மிருகங்களை காட்டிலும் மனிதனே மிகவும் ஆபத்தானவன்.
மனிதனுக்கு மனிதன் குணத்தில் மாறுபடுகிறான். இப்போது நான் என்ன செய்வது என்று துறவியின் காலில் விழுந்து வேண்டி கொண்டது அந்த மனிதனாக மாறிய எலி.
இதை கேட்ட துறவிக்கு கோபம் வந்துவிட்டது. துறவி ஆரம்பத்தில் எலியாக வந்த அந்த மனிதனை பார்த்து : இவ்வளவு உயிரினங்களாக மாறிய உனக்கு அந்த' எலி புத்தி மட்டும் மாறவில்லையே' என்று கோபம்கொண்டு, எப்போதும் எலியாக இருக்க தான் நீ லாயக்கி என்று கூறி அந்த மனிதனை கடைசியில் எலியாக மாற்றிவிட்டார்.
வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று சிறந்ததாக போய் கொண்டே இருக்கும். அதற்க்கு முடிவே இல்லை. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை. 

மனம் ஒரு கோயில்



உயிர், உடல் இரண்டையும் பாதுகாக்கும் கவசமே நம் மனம். . .     பாதுகாக்கவேண்டிய மனம் உயிரையும், உடலையும் எப்போதும் தாக்கிக்கொண்டே இருக்கிறது. . ஆம் தெளிவில்லாமல் எப்போதும் குழப்பமடைந்து கொண்டே இருப்பதால் உயிரையும், உடலையும் தாக்குகின்றது. .   ஆரோக்கியம் கெடுவதற்கும், மரணங்கள் ஏற்படுவதற்கும் முக்கிய காரணம் மனமே. 
குழப்பமான மனிதர்களிடம் பழகுவது, குழப்பமான தொலைக்காட்சி நிகழ்சிகளையே பார்ப்பது, குழப்பமான விஷயங்களையே தேடுவது, பேசுவது, சிந்திப்பது, படிப்பது போன்றவை குழப்பத்திற்கு முக்கிய காரணம். எப்படி ஒரு கூடை மாம்பழத்தில் ஒரு மாம்பழம் அழுகி போனால் மற்ற மாம்பழம் எல்லாம் கெட்டுவிடுமோ அதே போல் நல்ல முற்போக்கு சிந்தனையாளர்கள் (POSITIVE MIND) மத்தியில் ஒரு குழப்பம் செய்யும் மனிதர் (NEGATIVE MIND) இருந்தால் அனைவரையும் கெடுத்து விடுவார். ALWAYS BE POSITIVE...

குடி


குடிப்பவர்கள் குடி தனக்கு சந்தோஷத்தை தருகிறது என்ற நினைப்பில் தான் தினமும் குடிக்கின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று நமது ஆறாம் அறிவு கொண்டு சிந்திப்போமா........
*சந்தோஷம் கிடைக்கும் என்று பாருக்கு செல்பவர்கள் குடிக்கும் போது *தன் சந்தோசம் இழந்து வாக்குவாதம் செய்கின்றனர். 
*
இதனால் பெரும்பாலானோர் கோபம் அடைகின்றனர்......
*
இதனால் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது.....
*
இதனால் சண்டை போடுகின்றனர்....
*
போதை தலைக்கு ஏற ஏற என்ன நடக்கிறது என்பதை மறக்கின்றனர்.
*
குடிப்பதற்கு அந்த பார் பக்கம் யாரும் பார்க்காமல் இருக்கும் பொது உள்ளே சென்ற நாம் குடித்த பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊரே பார்க்கும்படி பார் வாசலிலேயே நின்று போதையில் நின்று ஆடிக்கொண்டே கத்தி கத்தி பேசி கொண்டிருப்போம் .....
*
நண்பர்கள் குடியால் சண்டை போட்டு ஜென்ம விரோதி ஆகின்றனர்..
*
பிறகு வீட்டிற்கு போதையுடன் வண்டியில் வரும்போது நிறைய பேருக்கு விபத்து ஏற்படுகிறது....
*
சிலர் விபத்தில் மரணம் கூட ஏற்படுகிறது......
*
வீட்டில் மனைவுடன் அல்லது அம்மாவிடம் சண்டை ஏற்படுகிறது....
*
காலை எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கிறது.....
*
வேலைக்கு போகவோ - தொழில் செய்யவோ கடுப்பாக இருக்கிறது..
*
அந்த நாள் முழுதும் எதையோ இழந்ததை போல் வெறுப்பாக நாள் செல்லும்....
*
எந்த ஒரு செயலிலும் உற்சாகம் இருக்காது...
*
நேற்று சந்தோஷம் என நினைத்து குடித்ததை நினைத்து கேவலமாக உணர்வோம்.....
*
குடிப்பவருக்கே பக்க வாதம் வருகிறது....
*
குடிப்பவருக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது...
பாலியல் பலாத்காரம்,,கொலை, கொள்ளை உருவாக முழு காரணம் குடியே.
நமது மானம் போகிறது
மதிப்பு போகிறது
மரியாதை போகிறது
அன்பு தொலைகிறது
பண்பு போகிறது 
பாசம் மறைகிறது 
பணம் போகிறது 
ஆரோக்கியம் போகிறது 
ஆயுள் போகிறது 
இதற்க்கு பேரா 'SITTING'
மொத்தத்தில் வாழ்க்கையே போகிறது 
சந்தோஷம் என்று தானே குடிக்க செல்கிறோம்.. எங்கே சந்தோஷம்..
உண்மையில் இதன் பேரா சந்தோஷம்....
சந்தோஷம் என்பது அவரவரே சுயமாக முடிவு எடுத்துகொள்வதே.
இது பழக்க பதிவு.. நம் மூளையில் நாம் குடித்தால் சந்தோசம் என்று நம்மை நாமே ஏமாற்றி பதிய வைத்துகொள்வது.
"
குடி குடியை கெடுக்கும் அன்று 
குடி வம்சத்தையே கெடுக்கும் இன்று" 
"
மாற்றங்கள் நிறைந்தது மனித வாழ்க்கை 
மாறாதவன் மாண்டு போவான்."