என் அம்மா
..பொறுமையின் மறு உருவம்
அனைத்தும் நீயே
என்று நினைத்த காலங்கள் மாறி போயின ....
பள்ளிக்கு
செல்லும் போதும் திரும்பி வரும் வரை எப்போதும் உன் ஞாபகம் .,.....
கருவறையில் உன்
காற்றை சுவாசித்து
நீ உண்ட உணவை
உண்டு
உன் உதிரத்தில்
இருந்து பிரியும் பாலை உண்டு
உன் அன்பை சதா
சர்வ காலமும் பெற்று
பசிக்கு உனக்கு
சோறு இல்லாத நேரத்திலும் எங்கள் பசியாற்றி
படிப்பை முடித்து,
பட்டதாரி ஆகி, பணியில் சேர்ந்து சம்பளம் வாங்கி
அனைத்தையும்
உன்னிடம் சமர்ப்பணம் பண்ணி மகிழ்ந்த காலங்கள் மறைந்து போயின அம்மா
சிறு வயதில்
உனக்கு மார்பு வலி அடிக்கடி எடுக்கும் போதெல்லாம்
என் உடல்
முழுதும் பயம் கவ்வி கொண்டு நீ இல்லாத இந்த உலகத்தையே வெறுத்த காலங்கள் ஏராளம்.
நீ இல்லையேல்
நான் இல்லை என்ற காலம் மாறி போனது அம்மா
இன்று நீ
என்னுடன் இல்லை அம்மா
நீ என்னை விட்டு
பிரிந்து ஒரு வருடம் ஓடிவிட்டன அம்மா
... ஆம் உன் உடல் தான் இல்லை
ஆனால் ஒவ்வொரு
நொடியும் நீ என்னுடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறாய் அம்மா..
உயிர்
அழிவதில்லை. உன் உயிர் என்னுடனே கலந்து விட்ட நினைவில்... நம்பிக்கையில்...
என்றும் உன்
அன்பை மறவா உன் ஆசை மகன்....
நீ நினைத்த
வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறேன் அம்மா
நீ வாழ்ந்த
பொறுமையை கடைபிடிக்கிறேன் அம்மா
யாருக்கும்
தீங்கு நினைக்காத உன் உள்ளத்தை பின்பற்றுகிறேன் அம்மா ...
நல்லதை
சொல்கிறேன்... நல்லதை செய்கிறேன்.. நல்லவனாக வாழ முயற்சிக்கிறேன் அம்மா...
உன் பிரிவால்
வாடாமல் உன் வார்த்தையை வேத வாக்காக நினைத்து என் உயிர் இருக்கும் வரை
அனைவருக்கும் நல்ல ஆற்றல் கொடுக்கும் மகானாக இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ உன்
ஆசிர்வாதத்துடன் முயற்சிக்கிறேன் அம்மா..
"வேதம் சொல்லாததை மரணங்கள் சொல்லும்"
No comments:
Post a Comment