Tuesday 17 March 2015

6 ஆம் அறிவு


ஆறு அறிவு படைத்தவன் மனிதன். ஐந்து அறிவு நிலை வரை குறிப்பிட்ட சில சிந்தனை மட்டுமே சில உயிரினங்கள் பழக்க படுத்தி இருக்கிறது. பசிக்கு உண்பது. தூக்கம் வந்தால் உறங்குவது. வேட்டையாடுவது, பிற உயிரை அடிப்பது போன்ற சிந்தனை. இதில் தவறு ஒன்றுமில்லை. ஏனென்றால் இந்த உயிரினங்களுக்கு சமைக்க தெரியாது. ஆறாம் அறிவு படைத்த மனிதனால் மட்டுமே தன் சிந்தனையை பரந்து விரிந்த நிலையில் யோசிக்க முடிகிறது. ஆறாம் அறிவு என்பது பகுத்தறிவு என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த ஆறாம் அறிவு படைத்த மனிதன் சிந்திக்கும் திறன் விரிவடைந்த காரணத்தால் பல சாதனைகளை அடைந்து கொண்டிருக்கிறான் உதாரணமாக விமானம் - ரயில் - கப்பல் தொலைபேசி - தொலைக்காட்சி - கணிப்பொறி - இன்டர்நெட் போன்ற ஏராளமான கண்டுபிடுப்புகள் இதற்கு சான்று.. இது போல தனக்கு புரியாத ஏராளமான பிரபஞ்ச ரகசியங்களை ஆராய்ந்து கண்டுபிடிப்பவர்கள் 5% சதவீத மக்களே ஆகும். இவர்கள் தன் ஆறாம் அறிவை நன்றாக பயன்படுத்தி வெற்றி பெருகின்றனர்.. மீதம் இருக்கும் 95% சதவீத மக்கள் தன் ஆறாம் அறிவை .றாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இன்றைய காலகட்டத்தில் நிறைய நோய்கள் வீட்டுக்கு வீடு பரவி இருக்கின்றது. காரணம் மனிதனுக்கு அத்தியாவசிய தேவை உண்ண உணவு - உடுக்க உடை - இருக்க இடம். இதை தாண்டி மனிதன் பேராசையை வளர்த்துக்கொண்டு இந்த பேராசை தீர எதையோ தேடிக்கொண்டே இருக்கிறான். தான் சக நண்பர்களை - உறவினர்களை வெளி வாழ்க்கையை பார்த்து தானும் அது போல வாழ வேண்டும் என்று ஆசை பட்டு ஓடிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் நிம்மதியை இழந்து விடுகிறான். ஆறாம் அறிவு என்பது நமக்கு தெரியாத உயிர் இயங்குவதை ஆராய்ந்து விளக்கம் அடைவதையும் . நமக்கு தெரியாத தானாக இயங்கும் மூச்சின் ரகசியத்தை உணர பயன்படுத்த வேண்டும் என்று மனிதன் எண்ணியதில்லை.
சிறிய கதை: 
ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். தினம்தோரும் அவன் கடவுளை நம்பிக்கையுடன் வணங்கி வந்தான். ஒரு நாள் கடவுள் அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அதற்கு விவசாயி இறைவனிடம் என் பக்கத்து இடதுகாரன் 100 ஏக்கர்  நிலம் வைத்து இருக்கிறான். எனக்கு அதற்கு மேல் நிலம் வேண்டும் என்றார். உடனே கடவுள் அப்படியே ஆகட்டும் நாளை காலை சூரியன் உதிக்கும் வேளை முதல் சாயந்திரம் சூரியன் அஸ்தம்பிக்கும் வரை எவ்வளவு தூரம் நீ நிலத்தை கடந்து செல்கிறாயோ அதுவரை உனக்கு சொந்தம் என்று கூறினார். மேலும் கடவுள் ஒரு சிறு நிபந்தனை ஒன்றை கூறினார். அது நீ எவ்வளவு தூரம் கடந்தாலும் சாயந்திரம் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்க்கு  முன் நீ எங்கிருந்து ஆரம்பித்துத்தாயோ அங்கேயே வந்து விடவேண்டும் என்று கூறினார். இதை கேட்ட விவசாயி மறுநாள் காலை 6 மணிக்கு தன்னுடைய நிலத்தில் இருந்து ஓட ஆரம்பித்தார். மாலை 5 மணி ஆகிவிட்டது. மேலும் சிறிது தூரம் ஓடி களைத்து பின் கடவுள் சொன்னது நினைவுக்கு வரவே மீண்டும் சூரியன் அஷ்தமிக்கும் முன் தான் கிளம்பிய அதே இடத்திற்கு வேகவேகமாக தன் சக்திற்க்கு மேல் மூச்சு இறைக்க இறைக்க வந்து ஆரம்பித்த இடத்திலே வந்து வீழ்ந்து இறந்தார். அங்கு சுற்றியிருந்த உறவினர்கள் அவரை ஆறடி பள்ளத்தில் கிடத்தி மூடினர். 

No comments:

Post a Comment