Wednesday, 18 March 2015

இன்பம்


கடற்கரையில் ஒரு இளைஞன் தினந்தோறும் அண்ணாந்து படுத்துக்கொண்டு கால் மேல் கால் போட்டு எதை பற்றியும் கவலை படாமல் ஜாலியாக இருந்தான். அந்த வழியில் தினமும் நடைபயிற்சி செய்யும் மிகபெரிய தொழிலதிபர் ஒருவர் இவனை பார்த்து கோபமடைந்தார். மேலும் அந்த தொழிலதிபர் இந்த இளைஞன் அருகில் சென்று ஏம்பா இப்படி வெட்டியா படுத்துகிட்டு பொழுதை கழிக்கிறாயே ? இப்படி சும்மா இருப்பதற்கு ஏதாவது  இந்த கடற்கரையில் சுண்டல் விக்கலாமே என்றார். அதற்கு அந்த இளைஞன் சுண்டல் விற்று என்ன செய்வது என்றான். தொழிலதிபரோ மேலும் 5 பேர்களை வேலைக்கு வைத்து சுண்டல் விற்று நீ முதலாளி ஆகலாம் என்றார். அதற்கு இளைஞன் நான் முதலாளி ஆகி என்ன செய்யபோகிறேன் என்று கேட்டான். தொழிலதிபர் இளைஞன் இடம் முதலாளி ஆகி ஒரு பெரிய கடை வைக்கலாம் என்றார். கடை வைத்து என்ன செய்யலாம் என்று கேட்டான் இளைஞன். அதற்க்கு தொழிலதிபர் நீ நிறைய கடைகளை திறந்து வேலைக்கு ஆட்களை அமர்த்தி  பெரிய தொழிலதிபர் ஆகி கால் மேல் கால் போட்டு படுத்துக்கொண்டே ஜாலியாக இருக்கலாம் என்றார். அந்த இளைஞன் தொழிலதிபரை பார்த்து இப்போதே நான் அப்படி தான் இருக்கிறேன் இதை எல்லாம் செய்து தான் நான் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை என்று பதில் கூறினான். 
"
இன்பம் என்பது வெளியிலே தேடினால் கிடைக்காது. அது நம் வாழ்க்கையை எடுத்துகொள்ளும் முறையிலே தான் இருக்கிறது. ஆம் நமக்குள்ளே தான் இன்பம் இருக்கிறது. அதை தேடி - உணர்ந்தால் இந்த நாளும் இனிய நாளே "

No comments:

Post a Comment