Wednesday 18 March 2015

சிறந்த பெற்றோரும் சிறுவர்களும் : சிறந்த குருவும் மாணவனும்

 :
1. தாய் பூனை ஆபத்து வரும் வேளையில் தன் குட்டியை கவ்வி தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கூட்டிச்செல்லும். இதில் குட்டி பூனை தாய்க்கு உதவி செய்ய தெரியாது.
2. தாய் குரங்கு ஆபத்து வரும் வேளையில் தன் குட்டியை விட்டு விட்டு தனியாக ஓடும். ஆனால் குட்டி குரங்கோ ஓடி சென்று தன்னை விட்டு ஓடும் தாய் குரங்கை தாவி கழுத்தை 
பிடித்துகொண்டு அங்கிருந்து தாயுடன் தப்பித்து விடும்.
3. தாய் கோழி தன் குஞ்சுகளுடன் இரையை உண்ணும்போது கோழி ஒரு இடத்திலும் குஞ்சுகள் வேறு ஒரு இடத்திலும் இரையை கொறித்து கொண்டு இருக்கும். அப்போது மேலே வட்டமிடும் கழுகு கோழி குஞ்சுகளை கொத்தி செல்ல கீழே இறங்கி வந்துகொண்டிருக்கும் வேளையில் ஆபத்தை உணர்ந்த தாய் கோழி குஞ்சுகளை நோக்கி ஓடி வரும். அதே போல கோழி குஞ்சுகளும் தை கோழியை நோக்கி ஓடி வரும். இறுதியில் கழுகு கீழே இறங்குவதற்கு முன் தாய் கோழியும் கோழி குஞ்சுகளும் ஒரே இடத்தில சேர்ந்து பிறகு தாய் பறவை தன் சிறகுகளை விரித்து குஞ்சுகளை கழுகிடம் இருந்து காப்பாற்றி விடும்.
இது போல் பெற்றோரும் குழந்தைகளின் தேவைகளை புரிந்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். குழந்தைகளும் பெற்றோரின் அறிவுரைகளை மதித்து பின்பற்றவேண்டும். இவ்வாறு இருவரும் புரிந்து - அடுத்தவர் மனநிலையை உணர்ந்து தாய் கோழியும் குஞ்சுகளும் எப்படி வாழ்கின்றனவோ அப்படி வாழவேண்டும். ஒரு சிறந்த குருவிற்கும் மாணவனுக்கும் கூட இதுவே தான் எடுத்துகாட்டு. பூனையும் குட்டியும் போலவும் - குரங்கும் குட்டியும் போலவும் நிச்சயம் நாம் இருக்ககூடாது.


No comments:

Post a Comment