Wednesday 18 March 2015

வாக்குவாதம் - கலந்துரையாடல்


நாம் ஒவ்வொருவரும் எதை நோக்கி பயணிக்கிறோம்........ தெரியுமா?
மரணத்தை நோக்கி. ஆம் நாம் பிறக்கும் போதே மரணம் நிச்சயிக்கபடுகிறது. ஆனால் நாம் அதை ஒத்துகொள்ள மறுக்கிறோம். மனித பிறவி எடுத்து பல கோடி ஆண்டுகள் ஆகிறது. 
100
வருடம் முன்பு இருந்தவர் இன்று இல்லை. இன்று இருப்பவர் 100 வருடம் கழித்து இல்லை. இதை நாம் நன்கு அறிவோம். இந்த வாழ்க்கையில் இதை உணர்ந்தும் நாம் நமக்கு முடிவே இல்லாதது போல் நம்மை நாம் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் கடந்து வந்த வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்து இருக்கிறது. இந்த அனுபவ பாடங்களில் இருந்து நாம் ஆராய்ச்சி செய்து நம்மை நாமே திருத்தி கொண்டு தெளிவு அடைய வேண்டும். ஆனால் பெரும்பாலான மக்கள் தம்மை குழுப்பி கொண்டு வாழ்கின்றனர். வாழ்வது ஒரு கலை. நாம் அனைவரும் நம் மனசாட்சி படி யோசித்தால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமக்கு புரியும்.
Argument:
உதாரணமாக நாம் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் நாம் செய்வது தான் சரி நாம் என்ன கூறினாலும் நாம் சொல்வது தான் சரி என்று நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம். நாம் எந்த கருத்தை கூறினாலும் அது தவறே ஆனாலும் அது தான் சரி என்று நாம் பிடித்த முயலுக்கு மூனே கால் என்பது போல் பேசுகிறோம். இது தான் வாக்குவாதம். நாம் அடுத்தவரிடம் பேசும்போது வாக்குவாதம் செய்வது முற்போக்கான வழிமுறை அல்ல . உதாரணமாக ஒரு அஜித் ரசிகர் ஒருவர் தன் அஜித் படம் தான் உலகத்தில் சிறந்தது என்று பேசுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் . சில நேரங்களில் விஜய் சினிமா நன்றாக இருக்கிறது என்று வைத்துகொள்வோம். அப்போதும் அந்த அஜித் ரசிகர் என்னுடைய தல படம் தான் சிறந்தது மற்ற எல்லா படமும் வேஸ்ட் என்று கூறுவதற்கு பெயர் வாக்குவாதம். இந்த வாக்குவாதம் நம்மை உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கும் கோப பட்ட நிலைக்கும் நம்மை தள்ளி விடும்.
Discussion:
இது போன்று நமக்கு எந்த விஷயம் பிடித்திருந்தாலும் அதை தாண்டி வேறு சில விஷயம் நன்றாக இருந்தால் அதுவும் நன்றாக தான் இருக்கிறுது என்று ஒத்துகொள்வது கலந்துரையாடல். உதாரணமாக அஜித் ரசிகர் போன வருடம் என் தல படம் நன்றாக இருந்தது ஆனால் இந்த தடவை விஜய் படம் அதை விட சிறப்பாக இருக்கிறது என்று உண்மையை ஒத்துகொள்வது கலந்துரையாடல். இது மிகவும் முற்போக்கான சிந்தனை.
நமக்கு பிடித்த விஷயத்தில் உண்மை இருந்தால் அதை ஆமோதிப்பதும்
உண்மை இல்லை எனில் அதை வாதாடாமல் ஏற்றுகொள்வதும் சிறந்த குணம். 


No comments:

Post a Comment