Wednesday 18 March 2015

திறமை


முழுமையான திறமை வெளிப்பாடு - why not ? 


எனக்கு தெரிந்த 20 வயது பெண். கருமையான நிறம்,யாரும் அவரை அழகாக இருக்கிறார் என்று பார்த்த மாத்திரத்திலே கூறுவர், பாட்டு திறமை அதீதம், நடனம் அழகாக ஆடுவார், நல்ல அறிவு, மிகவும் கூர்மையான கிரகிக்கும் திறமை.மேக்-அப் செய்யும் கலை ஆகிய இத்தனை திறமைகள் இருந்தும் எப்போதும் குழப்பமாகவே இருப்பார். தன்னம்பிக்கை அவரிடம் குறைவாகவே இருக்கிறது. காரணம் தன் சுய பலம் அதிகமாக இருப்பதை அவர் உணரவேயில்லை. அவரின் இத்தனை திறமைகளையும் அவர் மறைத்துக்கொண்டு அறிவுரை என்ற பேரில் அடுத்தவர் கூறும் negative ஆன வார்த்தைகளை அவர் உள்வாங்கி கொள்கிறார். இதனால் அவரின் சுய பலம் - சுய திறமை - சுய சிந்தனை அவருக்கு பயன் தரவில்லை. ஒருவர் சாதிக்க வேண்டும் என்றால் நிச்சயம் அவருக்கு முற்போக்கு சிந்தனை (PMA -POSITIVE MENTAL ATTITUDE ) மிகவும் அவசியம். இவர் நிச்சயம் MULTI TALENTED PERSON -பல துறைகளிலும் திறமைசாலி. அதில் துளி கூட சந்தேகம் இல்லை. இருந்தும் இதை உணராமல் இருக்க - தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவதற்கு முக்கிய காரணம் அவருடைய மூளையை மற்றவரிடம் அவர் அடகு வைத்து விடுகிறார். மற்றவர் கூறும் அறிவுரை என்பது நல்ல அக்கறையினால் மட்டும் தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பொறாமையினால் - கெட்ட எண்ணத்தினால் கூட மற்றவர் அறிவுரை இருக்கலாம். IDENTIFY THE PEOPLE - ஒருவர் அறிவுரை கூறும் போது அறிவுரை கூறும் நபர் மற்றும் அறிவுரை கூறும் விஷயம் இரண்டையும் நாம் ஆராய்ந்தால் நாம் குழப்பம் அடையாமல் தெளிவான முடிவை நாம் எடுக்கலாம். உதாரணமாக கணிதமே தெரியாத ஒருவர் கணித பாடம் படிக்காதே அது உனக்கு உபயோகபடாது என்று அறிவுரை கூறினால் நாம் முதலில் ஆராயவேண்டியது சொல்ல கூடிய நபர் கணிதம் நன்றாக தெரிந்தவரா மற்றும் சொல்ல கூடிய விஷயம் கணிதத்தை பற்றி ஆகவே இந்த அறிவுரையை நாம் நமது மூளையில் ஏற்றிகொள்ளகூடாது. காரணம் சொல்ல கூடிய நபர் - சொல்ல கூடிய விஷயம் இரண்டுமே சரி இல்லை(FIT FOR NOTHING). அறிவுரை என்பது இந்த பக்கம் போகாதே என்று மட்டும் சொல்வது கிடையாது எந்த பக்கம் போகவேண்டும் என்று வழிகாட்டுவதும் அறிவுரை தான். ஆகவே நாம் நம் சுய பலத்தை - திறமையை ஆராய்ந்து தெளிவாக பயன்படுத்த வேண்டும். குழப்பம் நம் லட்சியத்தை பாழாக்கும் - தெளிவு நம் இலட்சிய கனவை நினைவாக்கும். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் - BE POSITIVE

No comments:

Post a Comment