Sunday 15 March 2015

சாதனை





நாம் வாழும் வாழ்க்கை புனிதமானது. இந்த வாழ்க்கையை நாம் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதும் கவலையாக வாழ்வதும் பிறரிடம் இல்லை. நம்மிடம் தான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் நம்மை சார்ந்தவர் மற்றும் அடுத்தவர் மனநலம் தெரிந்து புரிந்து நடத்தல் வேண்டும். நாம் நம்மில் நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் பேச்சு மற்றும் செயல் அடுத்தவர் கண்ணீரை துடைக்கும்  கருவியாக  இருக்க  வேண்டுமே அன்றி அடுத்தவரை அழவைப்பதற்காக  இருக்க கூடாது. " உளி படாத கல் சிற்பம் ஆகாது ". ஆம் தினந்தோறும்
 நாம் சந்திக்கும் தோல்விகளும், வழிகளும் நம் நல்ல சிந்தனையை பாதிக்காத வண்ணம் நம் லட்சிய பாதையை தடம் மாற வண்ணம் பார்த்துகொண்டால் நாமும் ஒரு நாள்  சிற்பமாவோம்.
ஒரு காட்டில் இரண்டு  பெரிய கற்கள் இருந்தது. அந்த வழியாக சென்ற வழிப்போக்கன் அந்த கற்களை பார்த்து அந்த கற்களின் அருகே சென்றான். அந்த வழிப்போக்கன் முதலில்   இருந்த  கல்லை  பார்த்து கல்லே- நீ எனக்கு தேவை படுகிறாய். நான் உன்னை எடுத்து கொள்ளட்டும என்று கேட்டான். அதற்கு  அந்த கல் என்னை எடுத்து என்ன செய்ய போகிறாய், என்று கேட்டதுஅதற்கு வழிபோக்கனோ நான் உன்னை ஒரு மாதம் பயன்படுத்திகொள்வேன் . ஆனால்   உனக்கு கொஞ்சம் வலிக்கும். பிறகு நீ நல்ல பலனை வாழ்க்கை முழுதும் பெறுவாய்  என்று  கூறினான். அதற்கு அந்த முதல் கல்லோ, மானிடா நீ என்னை உபயோகபடுத்திகொள் ஆனால் நிபந்தனை  என்னவென்றால் எனக்கு அதிகமாக வலிக்காமல் என்னை பயன்படுத்திக்கொள் ENRADHU. இதனிடையே இரண்டாவதாக இருந்த கல்லோ வழிபோக்கனிடம் நான் பல நூறு ஆண்டுகளாக சும்மா தான் இருக்கிறேன். நான் எவ்வளவு வலியை  வேண்டுமானாலும்  தாங்கிக்கொள்ள  தயாராக  இருக்கிறேன். ஆனால் அதற்க்கான பலன் எனக்கு வேண்டும் என்றது. உடனே வழிப்போக்கன் இரண்டாவது கல்லை எடுத்து தன் உளியை கொண்டு சுத்தியலால் அடிக்க  ஆரம்பித்தான்.
     பல நாட்களாக அந்த இரண்டாவது கல் அந்த உளியால் ஏற்படும் வலியை தாங்கிகொண்டது. இறுதியில் வழிப்போக்கன் இரண்டாவது கல்லை செதுக்கி செதுக்கி ஒரு அழகான சிலையாக உருவாக்கி அந்த காட்டில் உள்ள மேட்டின்  மீது பீடம் அமைத்து வைத்துவிட்டான்பிறகு முதலாவதாக பார்த்த  கல்லை அதிகமாக வலி ஏற்படாமல் லேசாக வெட்டி பாகம் பாகமாக்கி அந்த சிற்பத்திற்கு  படிக்கட்டுகளாக அமைத்துவிட்டான்.

நாட்கள் கழிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த படிக்கட்டுக்களை மிதித்து மிதித்து ஏறி மேலே அமைந்திருக்கும் சாமி சிலை வடிவமான சிற்பத்தை தரிசித்து பாலாபிஷேகம்தேனாபிஷேகம், அர்ச்சனைகள், வழிபாடுகள், வேண்டுதல்கள்
செய்து  மாலை  அணிவித்து சாமி சிலையின் பாதத்தில்   விழுந்து வணங்கினர்வலியை தாங்கிகொண்ட இரண்டாவது கல் சிற்பமாகி அனைவரும் விழுந்து வணங்கும்  வகையில் உயர்ந்து மிக  மிக  உன்னதமான  நிலையை  அடைந்தது. வலியை சகித்துக்கொள்ள முடியாத முதல் கல் யாருடைய கவனிப்புமின்றி அனைவரின் காலால்   மிதிபட்டு கொண்டே காலத்தை கவலையுடன் கழித்தது.
ஆம், இதுபோல தான் நாமும் நம் வாழ்க்கையில் ஏற்படும் வேதனைகளையும் , சோதனைகளையும் நம் அனுபவ பாடமாக கருதி அந்த வலியை தாங்கிக்கொண்டு அயராது நம் லட்சிய பாதையில் நம்பிக்கையுடன் பாடுபட்டால் ஒரு நாள் இந்த உலகத்தில் நாம் ஒரு சாதனையாளராக நிச்சயம் உயர முடியும்.
   
"முயற்சி உடையார் இகிழ்ச்சி அடையார் " (WHERE  THERE IS A WILL  THERE IS A WAY) உலகத்தில் உயர்ந்த மாமனிதர்களும், சாதனை புரிந்தவர்களும் நிறைய ஏமாற்றங்களையும், சோதனைகளையும் கடந்த பிறகே சாதித்து இருக்கின்றனர். மனித வாழ்வில் நாம் இன்பத்தை தேடி அலைந்தாலும் பெரும்பாலோருக்கு துன்பமே ஏற்படுகிறது. காரணம் தேவையான ஆசையை  கடந்து பேராசையே அதற்கு காரணம். மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவை உன்ன உணவு - உடுக்க உடை - இருக்க இடம். இந்த மூன்றும் வாழ்க்கைக்கு  மிக மிக அவசியம். ஆனால் இதை தாண்டி மனிதன் இதில் திருப்தி அடையாமல் இந்த சமுதாயத்தில் பெரிய பணக்காரர்களுடனும், தம் சொந்தகாரர்களுடனும் சமன் செய்துகொண்டு (COMPARE) தன் வாழ்வை ஏக்கத்துடனும். குழப்பத்துடனும் சீரழித்து கொள்கின்றனர்.
நம் வாழ்வில் தீய எண்ணங்களையும், பிற்போக்கு சிந்தனைகளையும் ஒதுக்கிவிட்டால் எப்படி தேவை இல்லாத கற்களை ஒதுக்கிவிட்டால்   சிற்பம் ஆகிறதோ அது போல் நாமும் ஒரு சிறந்த மனிதனாக  திகழ்வதில் ஐயம் இல்லை.
இவ்வுலகில் ஒவ்வொரு மனதனுக்கும் ஏதாவது  ஒரு திறமை நிச்சயம் இருக்கும். அதை சரியாக தெரிந்து, உணர்ந்து அந்த திறமையை முழு கவனத்துடன்   வளர்த்து வந்தால் நாம் வெற்றி பெறுவது  நிச்சயம்நிறைய பேர் தன் பலம்  என்னவென்று  அறியாமல்  தன் பலவீனத்தை உபயோகபடுத்திகொண்டு  மேலும்  மேலும்  குழப்பம்  அடைந்து  இறுதியில் தோல்வியை அடைகின்றனர்.
தமது மூளையை மற்றவரிடம் அடகு  வைத்துவிடுகின்றனர். அங்கீகாரத்தை மற்றவரிடம்      எதிர்பார்க்கின்றனரே தவிர சுயமாக தனக்கு தானே எடுத்துகொள்ளவில்லைஇதனால் தானும் குழப்பம் அடைந்து பிறரையும் குழப்பி விடுகின்றனர். மொத்தத்தில் வாழ்க்கையை தொலைத்து வீணடித்து விடுகின்றனர்தாமஸ் ஆல்வா எடிசன் தமது பல ஆயிரம் கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்பட்ட பிறகே சிறந்த விஞ்ஞானியாக வெற்றி பெற்றார். ISAAC NEWTON, INSTEEN   போன்ற விஞ்ஞானிகளும் இதே போல் பல தடவை தோல்வி அடைந்த பிறகே மக்களால் ஏற்றுகொள்ளபட்டனர் . சினிமா துறையில் நடிகர் விக்ரம் 16 ஆண்டு வருடங்கள்  ஏமாற்றமடைந்த பிறகே வெற்றி கனியை சுவைத்தார். நேற்றைய MGR , சிவாஜி, ரஜினி, கமல்,   முதல் இன்றைய  VIJAI , அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் வரை   அனைவரும் கடுமையான ஏமாற்றங்களுக்கு பிறகே சாதித்து வருகின்றனர். பெரும்பாலானோர்   தன் வெற்றியை பிறரிடம் இருந்து தான் கிடைக்கும் என்று கருதி ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர். இதனால் தனது பாதிப்பு சக்தி பிறரின்  கேட்ட எண்ணங்களாலும், பொறாமையினாலும் பாதிப்பு அடைந்து மற்றவரின் எண்ணங்களுக்கு விலை   போய்  தோற்றுவிடுகின்றனர்.
"நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன " என்ற பழைய பாடல் நினைவிற்கு வருகின்றது. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. விடாமுயற்சி வெற்றி தரும். அதற்கு தேவை அமைதியான மனம், தெளிவான சிந்தனை , தீர்க்கமான  முடிவு , அயராத  உழைப்பு , தன்னம்பிக்கை. ஒரு சிறிய எறும்பு கூட தன்னை விட வலுவான உணவு பொருளை தன்னம்பிக்கையுடன் கஷ்டப்பட்டு இழுத்து செல்கிறது. சிந்திக்கும் திறன் படைத்த மனிதனோ தன்னை விட வலிமையான விஷயங்களை பார்த்து அஞ்சி நடுங்குகின்றான். இன்றைய மனிதன் ஒரு பள்ளத்தை மூட பல பள்ளங்களை நொண்டி எடுத்துக்கொண்டே இருக்கின்றான். இறுதியில் ஒரு பள்ளம் மூட முயற்சித்தவன் பல பள்ளங்கள் உருவாவதற்கு காரணம் ஆகிறான். அதே போல் ஒரு பிரச்சனையை தவிர்க்க பல பிரச்சனைகளை தானே உருவாக்கி கொள்கிறான்.
மனிதன்  தன் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் எப்போதும் அமைதியாகவும், தெளிவாகவும், தன் அறிவை பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். தேவை இல்லாத விஷயங்களில் பணம் அலைய விடாமல் எப்போதும் முற்போக்கு சிந்தனையிலே பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தன்னுடைய குறைகளை மட்டும் ஆராய்ந்து புலம்பிக்கொண்டு வாழவேண்டும். இவ்வாறு வாழும்போது நாம் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். இந்த வகையில் அடுத்தவர் மனநிலை உணர்ந்து அவர்களுக்கு  உதவி செய்யும் நிலையிலே நாமும் நன்றாக வாழ்வோம். அடுத்தவருக்கு உதவி செய்த திருப்தியும், புண்ணியமும்  நமக்கு கிட்டும். எப்போதும் நம் அறிவு தெளிவுடன் விழிப்பு நிலையிலே இருக்கும் போது நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது. நாம் மிக பெரிய உயர்ந்த நிலையை நிச்சியம் அடைந்து விடுவோம் .

No comments:

Post a Comment