Tuesday 3 March 2015

வாழ்க்கை துணை

இல்லறம் - நல்லறம். குடும்பம் ஒரு கோயில். ஆனால் தற்போதைய  நிலை பெரும்பாலானோர் குடும்பங்களில் அமைதியை இழந்து வாழ்கின்றனர். கணவன் மனைவி இடத்தே நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற ஈகோ தலை விரித்தாடுகிறது. பெண்கள் முற்காலத்தில் பெண் அடிமையில் சிக்கி தவித்திருந்த காலம் மாறி தற்போது இரவில் பெரும்பாலான பெண்கள் பணிக்கு செல்லும் வரை நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். இது மிகவும் வரவேற்க தக்கது. அந்த காலத்தில் பெண்கள் உடுத்திய பாரம்பரிய உடைகள் மாறி தற்போது அணைத்து பெண்களுக்கும் ஏராளமான சுதந்திரம் கிடைத்தும், அவர்கள் கல்வியில் உயர்ந்தும், பணியிலும் பணம் சம்பாதிப்பதிலும் சிறந்து விளங்கினாலும் வாழ்க்கை கல்வியை ஏனோ கற்க மறந்து விட்டனர். ஒரு தொலைகாட்சி பெண்கள் பங்குபெறும் நிகழ்ச்சியில்  திருமணம் ஆகும் வயதுடைய பெண்கள் அனைவரும் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர். அவர்கள் தம் தம் கனவுகளையும், ஆசைகளையும் பட்டியலிட்டு   கூறும்போது மிகவும் வேதனை அளித்தது. காரணம் அவர்களின் பேராசையேதன கணவர் அடிக்கடி கடற்கரை, சினிமா, ஷாப்பிங் கூட்டிபோகவேண்டும் என்று கூறினர். மேலும் திருமணம் முடிந்தவுடன் நிச்சயம் தனி குடித்தனம் போய்விடுவோம் என்று கூறினர். தினமும் காபி போட்டு தரவேண்டும் என்று கூறினர். தினந்தோறும் தன்னை கொஞ்ச வேண்டும் என்று கூறினர். இப்படி தனக்கு தேவையான ஆசையை பட்டியலிட்டு கொண்டே சென்றனர். தனக்கு வேண்டியதை எல்லாம் மட்டும் கணவன் செய்து கொண்டே  இருக்கவேண்டும் என்று ஆசை படுகின்றனர். திருமணம் ஆனால் தன் கணவருக்கு என்ன பிடிக்குமோ அப்படி நான் நடந்துகொள்வேன் என்று ஒரு பெண் கூட அந்த நிகழ்ச்சியில் கூறவில்லை. தனக்கு தேவையானது மட்டும் கிடைத்து கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பது நியாயமா. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருப்பது இயற்கையே. அப்படி இருக்க இந்த காலத்து பெண்கள் தனக்கு வேண்டியது மட்டும் நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பது பேராசையே. இது நிச்சயம் நிறைவேறாத ஆசையே. அப்படி யாராவது இவர்களுக்கு வாழ்க்கை முழுதும் எதையும் எதிர்பார்க்காமல் பணிவிடை செய்கின்றனர் என்றால் நிச்சயம் அவர்கள் நடிக்கிறார்கள் அல்லது வேறு ஏதாவது மறைமுகமான பிரச்சினை அங்கு உள்ளது என்று அர்த்தம்.
                                    நாம் அன்பை எதிர்பார்த்து வாழ்கிறோம், ஆனால் மனிதராக பிறந்த நாம் அனைவரும் அன்பை கொடுக்கத்தான் பிறந்திருக்கிறோம்.
"அன்பிருக்கும் உண்டோ அடைக்கும் தாழ் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது"
அன்பை நாம் கொடுக்க கொடுக்க அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடம் இருந்து நாம் நிச்சயம் அன்பை திரும்ப பெறமுடியும். அப்போது அந்த குடும்பத்தில் நிச்சயம் அமைதி நிலவும்.
                        தான், தனது என்ற கடும்பற்று கணவன் மனைவியிடத்தே இன்று அதிகமாக கானபடுவதால் குடும்பங்களில் ஆசைகள் நிறைவேறாமல் நிம்மதியை இழக்கின்றனர். எதிர்பார்ப்புகள் அதிகமாகி கவலை ஏற்படுகிறது. கவலை கோபத்தை அதிகபடுத்துகின்றது. கோபம் நோயை உருவாக்குகிறது. நாள் பட்ட கோபம் வஞ்சமாகி விடுகிறது. வஞ்சம் மனதில் பதிந்த பிறகு வாழ்க்கையில் கணவன், மனைவியிடையே எவ்வளவு முன்னேற்றமும், பொருள் வரவு இருந்தாலும் இந்த வஞ்சமானது இருவருடைய பிரச்சினைகளை  உயர்த்திக்கொண்டே இருக்கிறது. இறுதியில் இருவரும் பிரிகின்றனர்.
                         கணவன்மார்கள் காலம் காலமாக பெண்கள் முன்னேற்றத்தை மனதார ஏற்றுகொள்ள மறுக்கின்றனர். பெண்கள் சுதந்திரமாக இருப்பதை எப்போதும் குற்றமும், குறையும் கூறி அவர்களை அடக்க பார்க்கின்றனர். அறிவில், பதவியில், பணம் சம்பாதிப்பதில் பெண்கள் தன்னை விட உயரும்போது ஆண்களால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை. பெண்களை மட்டம் தட்டி பேசிக்கொண்டே இருக்கின்றனர். LIFE PARTNER  வாழ்க்கை துணை நம் வாழ்க்கை முழுதும் நம்முடன் பயணிக்கும் ஓர் உயிர் என்பதை நாம் மறந்து விடகூடாது. அந்த உயிரை, உடலை நாம் போற்றி பாதுகாக்க வேண்டுமே அன்றி அந்த உயிரின் உணர்வுகளை சிதைக்க கூடாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் நாம் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால்.  
                                            கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டால் கணவன் அலுவலகம் செல்லும் வரை சண்டை போட்ட மனைவி அவர் அலுவலகம் சென்ற பிறகு அவர் வீடு திரும்பும் வரை அவர் பத்திரமாக வீடு திரும்பவேண்டும் இறைவனிடம் வேண்டிகொண்டிருப்பர். இந்த வேண்டுதல் கணவனுக்கு தெரியாது. ஆனால் கணவன்மார்களோ தன்னிடம் சண்டை போட்ட மனைவியை பற்றி சிறிது கூட கவலை படமாட்டார்கள். மேலும் அவரை மறைவிலும் சாபம் விடுவர்.
                                           கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் நேர்மையாகவும், உண்மையாகவும் வாழ்ந்துவந்தால் அந்த குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும். அமைதி நிலவும். இருவரும் மற்றவரிடமும் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்த்து நிறைகளை பார்க்க கற்றுகொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்க கற்றுகொள்ளுங்கள். வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலம். நேரத்தை நாம் திரும்ப (REWIND ) பன்னவேமுடியாது. சூரியன் அஸ்தமிக்கும் ஒவ்வொருநாளும் நாம் நம் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நாள் கூடிவிட்டதையும், வாழப்போகும் நாட்களில் ஒரு நாள் குறைந்து விட்டதையும் உணர்த்துகின்றது. இன்று இருப்பவர் நாளை இல்லை. இதனை புரிந்துகொண்ட நாம் எல்லா வசதிகளும், உறவுகளும் இருக்கும்போதே பேராசையாலும், கோபத்தாலும் அனைத்தையும் இழந்து பின் வாடி அழுதுகொண்டிருந்தால் என்ன பயன். இந்த வேகமான உலகத்தில் யாருக்கு எப்போது, எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது இயற்க்கை நியதி. இதை உணர்ந்து நாள்தோறும் நாம் நம்மை சார்ந்தவரிடம் எப்போதும் விட்டுகொடுத்து அன்புடன் வாழ முயற்சி செய்தாலே எப்போதும் நாம் இன்பமுடன் வாழலாம்.  
எனக்கு தெரிந்த தம்பதியினர், பெண்மணிக்கு சுமார் 45 வயது இருக்கும். அவருடைய கணவருக்கு 50 வயது இருக்கும். பெரும்பாலும் ஆண்கள் நடை பயிற்சி செய்யும் 2 KM சாலை அது. அந்த பெண்மணியும் அவள் கணவரும் நடைபயிற்சிக்கு தினந்தோறும் வருகின்றனர். அவர் கணவர் (PARALYSE அட்டாக்) ஒரு கை கால் விழுந்தவர். அவருடைய முகம் மிகவும் கோரமாக வாய், கண் எல்லாம் இழுதுகொண்டிருக்கும். அவரின் மனைவி ஒரு கை கால் விழுந்து நடக்க முடியாமல் இருக்கும் தன் கணவரை தாங்கி பிடித்த  நிலையில் தினமும் நடைபயிற்சிக்கு கூட்டி வருவார். நடைபயிற்சி செய்யும் மற்ற அனைவரும் இவர்களை வித்தியாசமாக பார்ப்பார்கள். எனினும் அந்த பெண்மணி தன் கணவன் மேல் இருக்கும் பாசத்தினால்யாரை பற்றியும் கவலை படாமல் முழு கவனத்துடன், அக்கறையுடன் மெதுவாக தன் கணவரை தாங்கி மெதுவாக கூட்டிச்செல்வார்கணவரின் இந்த திடீர் நிலையால் பண வரவு நின்றுவிட்டது. குழந்தைகளின் வளர்ப்பிற்கு தேவையான அத்தியாவசியம் நின்று விட்டது. தன் கணவன் சுயமாக சாப்பிடவோ, குளிக்கவோ, காலை கடன் செல்லவோ முடியாத நிலையிலும் அணைத்து வேலைகளையும், குடும்ப பொறுப்புகளையும் பொறுமையுடன் தாங்கி கொண்டு அந்த மன வலியுடன் குடம்பதிர்க்காக சேவை செய்கிறார் அந்த பெண்மணி. கிட்டத்தட்ட அந்த பெண்மணி தன் கணவரை ஒரு 3.5 ஆண்டுகாலமாக நடை பயில கூட்டிக்கொண்டு  வருகிறார்மற்றவர்கள் வெறும் அரை மணிநேரமே நடைபயிற்சி செய்யும் இடத்தில் இவர் ஏறக்குறைய 2 மணி நேரமாவது எடுத்துக்கொண்டு மிகவும் மெதுவாக தன் கணவரை தாங்கி பிடித்து செல்வார்இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் அவர் முற்றிலும் விடிந்துவிட்ட பிறகு பாதையில் கனவரி தனியாக கூட்டிபோவதே . தன் கணவரை என்றுமே பாரமாகவோ, குறையாகவோ மனைவி நினைத்து கூட பார்த்ததில்லை.
                               பெண்ணே ஆசைப்பட்டு, ஆனால் அளவோடு. இவரும் ஒரு பெண் தான். LIFE PARTNER வாழ்க்கை துணை - அர்த்தம் புரிகிறதா. இந்த 3.5 ஆண்டுகாலமாக அவர் தன் கணவரை தினந்தோறும் நடைபயிற்சிக்கு கூட்டி வருகிறாரே என் தெரியுமா? என்றாவது ஒரு நாள் தன் கணவர் குணமாகிவிடமாட்டாரா ? தன் குடும்பம் பழையபடி சந்தோஷமாக வாழமாட்டோமா? தன் பிள்ளைகள் தன் தந்தையை பழையபடி பார்க்கமாட்டார்களா? என்ற ஏக்கம்இந்த ஏக்கத்துடன் தினம் தினம் நம்பிக்கையுடன் தன் கணவரை தாங்கி தாங்கி பிடிக்கிறார். இது அல்லவா கணவன் மனைவி உறவு.   இதில் ஒரு சோகம் என்னவென்றால் இந்த 3.5 ஆண்டுகளில் அவர் கணவருக்கு உடல் ரீதியாக எந்த முனேற்றமும் இல்லை என்பதே ஆகும்எனினும் அந்த பெண்மணி தன் முயற்சியையும், தன்னம்பிக்கையையும் சிறுது கூட தளரவிடாமல் இருப்பது தான்.
                                 பெண் ஒரு மகா  சக்தி  - ஆம் தாய்க்கு மகள் ஆகிறாள் - சகோதரனுக்கு சகோதரி ஆகிறாள் - குழந்தைக்கு தாய் ஆகிறாள் - மாமியார் ஆகிறாள் - மருமகள் ஆகிறாள் - பாட்டி ஆகிறாள். உலகில் பிறந்த ஆணும் பெண்ணும் ஒரு பெண்ணின் வயிற்றிலேயே உருவாகி வளர்கிறார்கள். மேலும் அந்த தாயின் வயிற்றில் அவள் உண்ட உணவை உண்டும் , அவள் சுவாசித்த காற்றை சுவாசித்தும் அவளின் ரத்தத்தில் இருந்து பிரியும் பாலை குடித்து வாழ்க்கையை துவங்கியதை யாரும் மறுக்க முடியாது.
                              பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும் - அழிக்கவும் முடியும். மதுரையை எரித்தவள் ஒரு பெண்ணே - பல ஏழை குழைந்தகளின் வாழ்வாதாரத்தை பெருக்கியவள் அன்னை தெரசா - விண்வெளியில் ராக்கெட்டில் சென்றவர் கல்பனா சாவ்லா - நாட்டை ஆண்ட இந்திரா காந்தி அம்மையார், செல்வி ஜெயலலிதா போன்றோரும் பெண்களே. ஆட்டோ, பேருந்து, ரயில் போன்ற நவீன வாகனங்களையும் ஏராளமான பெண்கள்   ஓட்டுகின்றனர். பெண்கள் நமது நாட்டின் கண்கள். ஆணில்லாமல் பெண் இல்லை. பெண் இல்லாமல் ஆண் இல்லை. ஆண்கள் கல் போன்றவர்கள். பெண்ணாகிய நீங்கள் ஆண்களை சமன் செய்து குற்றம் பார்க்காமல் அன்பு உளியை கொண்டு ஆண்களிடம் இருக்கும் தேவை இல்லாத குணமாகிய கற்களை செதுக்கி ஒதுக்கினால் நிச்சயம் ஒரு நாள் உங்கள் கணவன்மார்கள் சிறந்த சிற்பம் ஆவார்கள். பெண்களே எப்போதும் நீங்கள் தான் சிற்பி. இயற்கையில் பொறுமை - சாந்தம் - கண்ணியம் - அன்பு - பாசம் - நேசம் - கனிவு - இரக்கம் - தயை - அச்சம் - மேடம் - நாணம் - பயிர்ப்பு ஆகியவற்றிற்கு  சொந்தகாரர் தாங்களே. நீங்கள் நினைத்தால் மட்டும் தான் சாதாரண குழந்தையை  கூட சான்றோன் ஆக்க  முடியும்,   மனிதனை கூட மாகான் ஆக்க முடியும். காலங்கள் மாறலாம். தயவு செய்து நீங்கள் மாற முயற்சிக்க வேண்டாம். பல விஞ்ஞானிகளை பெற்று எடுத்தவளும்   ஒரு பெண்ணே. பல ஞானிகளையும், விஞ்ஞானிகளையும் ஈன்று எடுத்தவளும் ஒரு பெண்ணே. பல மாகான்களை உருவாகியதும் ஒரு பெண்ணே. பெண் ஒரு தெய்வம். பெண் ஒரு சகாப்தம். பெண் ஒரு சக்தி - மகா சக்தி . பெண் ஒரு பலம். இதை புரிந்து, உணர்ந்து செயல்பட்டீர்கள் ஆனால் குடும்பம் அமைதியாகவும், இன்பமாகவும் இருக்கும். குடும்பம் என்னும் பூட்டிற்கு இன்பம் என்னும் சாவி நீங்கள் தான்..பெண்ணே உன்னால் மட்டும் தான் வாழ்வை, தன் குடும்பத்தை இன்பமயமாக்க முடியும். வேறு யாராலும் இந்த அமைதியை ஏற்படுத்தவே முடியாது என்பதனை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். ஆகவே வாழ்க்கை துணையாக இருப்பவர்களும், இனிமேல் வாழ்க்கையை புதிதாக துவங்க போகிற பெண்களும் கொஞ்சம் சிந்தித்தால் எப்பேர்பட்ட கணவன் உங்களுக்கு வைத்தாலும் நீங்கள் அன்போடும், அறிவோடும், அமைதியோடும், செயல்பட்டு விட்டுகொடுத்து  பொறுமையுடன் ஆண்களின் பலம் - பலவீனம் இரண்டையும் கண்டெடுத்து ஆண்களின் பலவீனத்தை குறைத்து, பலத்தை வலுபடுத்தி அவர்களை நல்ல மனிதனாக உங்களால் மட்டும் தான் நிச்சயம்  முடியும்

                                  ஒரு  ஜாட்டியால் . பம்பரத்தை நன்றாக இறுக சுற்றி உங்கள் கைகளில் பிடித்து இழுத்து விட்டால் பம்பரமானது கீழே தனியாக சுற்றிகொண்டிருக்கும். ஆனால் ஜாட்டியோ உங்கள் கைகளிலேயே இருக்கும். பம்பரம் என்பது உங்கள் கணவன் . சாட்டி என்பது உங்களின் அன்பும், அரவணைப்பும். சுற்றும் பம்பரம் என்பது உங்கள் கணவர் திருந்தி வாழும் நிலை ஆகும்.

No comments:

Post a Comment