Friday 6 March 2015

முகமூடி



நம் நாட்டின் முகமூடி அணிந்து வாழும் மனிதர்கள் ஏராளம். ஆம் தன் நிஜமான குணங்களையும், வாழும் நிலையையும் மறைத்து மற்றவர்களிடம் போலியாக தன்னை உயர்த்திக்கொண்டு யாருக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழாமல் பிறரை நம்ப வைத்து ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிகொள்பவரே முகமூடி மனிதர். இவர்களுக்கு தனக்கு வேண்டியதை மட்டுமே சதா சர்வ காலமும் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். தனக்கு வேண்டியதை யார் யாரை ஏமாற்றி பயன் பெற முடியுமோ அதை முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். இந்த முகமூடி மனிதர்கள் யாராவது தனக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையில் அவர்கள் மீது எப்போதும் கோபமும், வஞ்சமும் கொண்டு வாழ்ந்து வருவார்கள். எதிராளிக்கு எப்போதாவது கஷ்டம் வரும் சூழ்நிலையில் அவர் முகத்திற்கு நேரே சிறிது சிறிது பேசி பின்புறம் தவறாக பேசி வஞ்சம் கொண்டு வாழ்வார்கள். அவர் கஷ்டத்தை பார்த்து கவலை படுவது போல் நடித்து பின்னாடி தீபாவளி கொண்டாடுவார்கள். இவர்கள் பழகுவதற்கு மிகவும் ஆபத்தானவர்கள். புதிதாக பழகும் யாரையும் வார்த்தை ஜாலத்தால் மிக மிக எளிதாக ஏமாற்றிவிடுவார்கள். இவர்கள் கண்கள் நேர்மையை மறைத்து எப்போதும் சுயன்று கொண்டே இருக்கும். இந்த உலகத்தில் இவர் பழகிய நண்பர்களில் யாரிடமும் நேர்மையாக இருக்க வாய்ப்பில்லை. மனைவி, மக்கள், தாய், தந்தை, சகோதர, சகோதரி ஆகிய அனைவரிடமும் உண்மையாக வாழ வாய்ப்பில்லை. இதில் வேதனை என்னவென்றால் மற்றவர்களை ஏமாற்றும் இவர்கள்  அனைவரும்  தன்னை ஏமாற்றுவதாக வருத்தபடுவார்கள். இன்னொரு பக்கம் யாருடைய முனேற்றமும், வளர்ச்சியும், திறமையும் இவரால் பொறுக்கமுடியாது. முகமூடி மனிதருக்கு மற்றவரை பாராட்டும்போது இவர்கள் அவர்களோடு தம்மை சமன் செய்து பார்த்து மற்றவரை விட தானே உயர்ந்தவர் என்ற மனப்பான்மையில் தன்னை உயர்வாக பேசி மகிழ்வர். எல்லோரிடமும்  தனக்கு  திறமைகள் அதிகம் என்று அங்கலாய்த்து கொள்வர். தன் தவறால் எத்தனை தடவை மற்றவர் பாதித்தாலும்  அது தன் தவறால் ஏற்பட்ட பாதிப்பு என்பதை சிறுது கூட உணர மாட்டார்கள். எங்கே என்ன நல்ல விஷயங்கள் சொன்னாலும், புத்தகத்தில் படித்தாலும் அதை அப்படியே மேல் மூளையில் வாங்கிகொண்டு மற்றவரிடம் பேசி பேசியே பெரும், புகழும் அடைய ஆசைபடுவார்கள். முகமூடி மனிதர்கள் அடுத்தவரின் புகழ்ச்சிக்கு ஏங்கிகொண்டே இருப்பார்கள். இவர்கள் தானும் கேட்டு பிறரையும் கெடுத்து விடுவார்கள். நல்ல விஷயங்களை படிப்பதனாலும், கேட்பதனாலும் என்ன பயன். அதை இவர்கள் உணர்ந்து வாழ்ந்தபாடில்லை. வார்த்தைகளால் அடுத்தவரை பிரமிக்க வைத்து ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அந்த அறிவு இருந்தும் என்ன பயன். நாம் கற்றுக்கொண்ட விஷயத்தை கேட்டு, புரிந்து, உணர்ந்து செயல்படுத்தி வாழ்தலே சிறந்த வாழ்க்கை. தான் படித்ததை, கேட்டதை அடுத்தவரிடம் கூறி நன்மதிப்பை பெற்று பிறகு அவரிடம் பணமோ அல்லது வேலை நிமித்தமோ பெறவேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே வாழ்வதில் என்ன பயன்.
                       "படித்து ஓதுதல் -    உணர்ந்து ஓதுதல்"

படித்ததை அப்படியே மற்றவரிடம் சொல்வது
படித்ததை உணர்ந்து வாழ்க்கையில் பயன்படுத்தி அடுத்தவரிடம் சொல்வது.

"epporul யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
 மெய் பொருள் காண்பது அறிவு "

யார் என்ன கூறினாலும் சொல்லகூடிய நபர் நல்லவரா  சொல்லகூடிய விஷயம் நன்மையான விஷயமா என்று ஆராய்ந்து தெளிவு அடைவதே அறிவு.

முகமூடி மனிதர்களின் முகத்திரை என்றாவது ஒரு நாள் இந்த சமுகத்தின் மூலம் கிழிக்கப்படும்.இந்த முகமூடி மனிதர்கள் சிந்தனைக்கு அவரே ராஜா அவரே மந்திரி. இவர்கள் மிக மிக சுயநலவாதிகள். இவர்கள் வாழும் உலகம்  மிகவும் சிறியது. அந்த உலகத்தில் இவர்கள் மட்டுமே வாழ்கின்றனர். தனக்கு பிடிக்காத விஷயங்கள் நல்ல முற்போக்கான விஷயமாக இருந்தாலும் அதை இவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும் அந்த நல்ல செயலை சட்டைசெய்யாமல் வாயில் பாட்டை முனுமுனுத்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருப்பது போல வேறு விஷயத்தில் கவனம் செய்து கொண்டிருப்பர்.

பலமுறை பலரும் இவர்கள் முகமூடி எண்ணங்களை கண்டுபிடித்து  கிழித்து சுயரூபத்தை வெளிகாட்டினாலும், கேவலப்படுத்தினாலும் தான் செய்த தவறை துளி கூட உணராமல் தன்னை பற்றி உண்மையை தெரிந்து கொண்டவர்களை பழி சொல் சொல்லி மேலும் புதிது புதிதாக புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டு அவர்களிடம் மீண்டும் போலியாக பழகிகொண்டிருப்பார்கள். அடுத்தவரின் வளர்ச்சி அனைத்துக்கும் இவர்கள் தான் காரணம் என்று மற்றவரிடம் பறைசாற்றி கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த முகமூடி மனிதர்களால் அனைவரும் பிரச்சனையில் மாட்டிகொண்டிருப்பது தான் உண்மை. தொடர்ச்சியாக யாரும் இவரிடம் நண்பராக பழக முடியாது. ஏனென்றால் யாராஇருந்தாலும் சிறிய காலத்திலே இவருடைய சுயரூபம் தெரிந்துவிடும்.
"மாறாதையா  மாறாது  மனமும் குணமும் மாறாது"
"உலகம் ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்பதை இந்த முகமூடி மனிதர்கள் தவறாக புரிந்துகொண்டார்களோ ?



No comments:

Post a Comment