Wednesday, 25 March 2015

பணக்கார பிச்சைகாரன்


ஒரு ஊரில் மிக பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் சுமார் இருபது வருடங்களாக ஆடைகளையும், ஆபரணங்களையும், பணத்தையும் சேர்த்து சேர்த்து வீட்டில் பதுக்கி வைத்து கொண்டார். அவர் செல்வங்களை எல்லாம் அனுபவிக்காமல், யாருக்கும் கொடுக்காமல் மறைத்து வைத்துகொண்டு வாழ்ந்து வந்தார். தன் மனைவி மக்களையும் சுக போக வாழ்வு வாழ விடாமல் கஷ்டத்திலேயே வாழ வைத்து வந்தார். 
ஒரு நாள் அந்த வழியாக துறவி வருவதை உணர்ந்த செல்வந்தர் அவரின் காலில் விழுந்து வணங்கி தனக்கு செல்வம் மேலும் மேலும் குவியவேண்டும் என்று வேண்டிகொண்டார். அதற்கு துறவி செல்வந்தரிடம் நீ உன்னிடம் இருக்கும் அணைத்து செல்வங்களையும் மூட்டை கட்டி கொண்டு என்னுடன் வா என்று துறவி கூறினார். அவ்வாறே அந்த செல்வந்தர் தன் செல்வங்களை எல்லாம் மூட்டை கட்டி கொண்டு துறவியுடன் காட்டிற்கு சென்றார். 
காட்டில் பெரிய குழி நோண்டி அதில் இந்த செல்வதை எல்லாம் புதைக்க சொன்னார் துறவி. மேலும் துறவி செல்வந்தரிடம் நீ ஒரு மாதம் கழித்து வா இந்த செல்வம் எல்லாம் பல மடங்கு பெருகி உனக்கு கிடைக்கும். ஒரு மாதம் கழித்து புதைத்து வைத்த மூட்டையை திறந்து பார்த்த செல்வந்தன் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அந்த மூட்டையில் வெறும் செங்கல் குவிக்க பட்டிருந்தது. துறவியை பார்த்து செல்வந்தன் கதறினான். என் செல்வம் எல்லாம் இப்படி வெறும் கற்களாக மாறிய காரணம் என்ன என்று துறவியிடம் புலம்பினான் செல்வந்தன். 
இதை கேட்ட துறவி செல்வந்தனிடம் :நான் தான் பணத்திற்கு பதில் இதில் செங்கல் வைத்தேன். நீ இருபது வருடமாக இவ்வளவு செல்வம் சேர்த்தும் என்ன பயன். இதனால் உனக்கும் பலனில்லை யாருக்கும் பலனில்லை. நீ வீட்டில் இவ்வளவு காலம் வைத்திருந்ததும் செல்வம் போல் உள்ள இந்த கற்களையே. இதனால் இந்த மூட்டையில் பணம் இருந்தாலும் ஒன்று தான் அதில் செங்கல் இருந்தாலும் ஒன்று தான் என்று செல்வந்தனின் பேராசையும், கஞ்சத்தனத்தையும் உணர்த்தினார். 
நாம் சம்பாதிக்கும் பணத்தில் 5% ஆவது வாழ்வில் கஷ்டபடுபவருக்கு கொடுத்தால் திருப்தியும் கிடைக்கும் வளமாகவும் அனுபவித்து வாழலாம்.....


No comments:

Post a Comment