Tuesday 17 March 2015

தேடல்:


வாழ்க்கையில் எதனையோ தேடிக்கொண்டே இருக்கிறோம். பணத்தையோ - பொருளையோ - திருப்தியையோ - இன்பத்தையோ தேடிக்கொண்டிருக்கிறோம். இதில் எது கிடைத்தாலும் நிம்மதியை தொலைத்துவிடுகிறோம். உதாரணமாக பணம் சம்பாதித்துவிட்டால் ஆரோக்கியம் கெட்டுவிடுமோ என்ற பயம். ஆரோக்கியமாக இருந்தால் பெண் ஆசை ஆரம்பமாகிவிடுகிறது. திருமணம் நடைபெற்று விட்டால் குழந்தை வேண்டும் என்று ஏங்குகிறோம். குழந்தை பிறந்தவுடன் குழந்தை நன்றாக வளர்ந்து பெரிய ஆளாகிவிடவேண்டும். குழந்தை பெரிய ஆளானவுடன் குழந்தைக்கு திருமணம் செய்யவேண்டும் என்ற ஏக்கம். பிறகு நம் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை. இப்படி ஏதோ ஒன்றை தேடி கொண்டிருக்கும் நாம் நம் நிம்மதியை தொலைத்து விடுகிறோம். பாதி தூக்கம் மீதி ஏக்கம். நேற்று என்பது முடிந்துவிட்டது. அது கனவு. அதை நினைத்து குழப்பம் அடைய வேண்டாம். நாளை என்பது மாயை. அது நம் கையில் இல்லை. இதனை நினைத்து ஏங்கவேண்டாம். இன்று இந்த நேரம் என்பது நிஜம். நம் உணர்வில் இருப்பது. நம் வாழ்வில் அனைத்தையும் தேடி அடைந்தவர்களும் நிம்மதி இல்லாமல் கோயில்களை சுற்றிக்கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். சூரியன் அஸ்தமிக்கும் ஒவ்வொரு நாளும் நாம் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நாள் கூடிவிட்டது என்பதனையும் வாழ போகும் வாழ்க்கையில் ஒரு நாள் குறைந்துவிட்டது என்பதனையும் உணர்த்துகின்றது. இதனை எப்போதும் நினைவில் வைத்து நாம் வாழ்க்கையை பயனுள்ளதாக குழப்பில்லாமல் ஆக்கிகொள்ளவேண்டும். இன்று இருப்பவர் நாளை இல்லை என்பதை தெளிவாக புரிந்து பயம் இல்லாமல் நம்மால் முடிந்தவரை அடுத்தவர்க்கு உதவி செய்கிறோமோ இல்லையோ உபத்திரம் செய்யாமல் வாழ பழகிக்கொள்ளுதல் வேண்டும். இதனை கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தால் நாம் நிம்மதியுடன் மகிழ்ச்சியாக வாழலாம். நம் பரம்பரைக்கு நாம் தெளிவு - ஆற்றல் - முற்போக்கு சிந்தனை - அறிவு - சம்பாதிக்கும் திறன் நம் dna கருவமைப்பு பதிவு மூலம் அழியா சொத்தை கொடுக்கமுடியும்.

No comments:

Post a Comment