பணம்....பணம்.....பணம்.......
ஆஸ்பத்திரியிலே பிணத்த வாங்க கூட பணம் .....
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பணம் இல்லா மனிதன் வாழ்க்கை பிணம்
பணத்தை படைத்தவன் மனிதன்
இன்று
பணத்தால் பரிதவிப்பவன் மனிதன்
பணம் உண்மையை பொய்யாக்குகிறது
பணம் பொய்யை உண்மையாக்குகிறது
பணம் அரசியலை நிர்ணயிக்கிறது
திருமணம் சொர்க்கத்தில் நிச்ச்சயிக்கபட்டது அன்று
திருமணம் பணத்தால் நிச்ச்சயிக்கபடுகிறது இன்று
மனிதன் பிறக்கும் போது கூட வந்ததில்லை பணம்
மனிதன் இறக்கும் போது கூட வருவதில்லை பணம்
பணம் மனிதனுக்கு அத்தியாவசியம்
பணமே வாழ்க்கை இல்லை
நிஜ வாழ்க்கையில் ...
அம்மாவின் பாசத்தை வாங்க முடியாத பணம்
மனைவியின் காதலை வாங்க முடியாத பணம்
நண்பனின் நட்பை வாங்க முடியாத பணம்
இன்று அனைத்தையும் வாங்க முயற்சிக்கிறது
இன்றோ பணம் பத்தும் செய்கிறது....பதினொன்று...பனிரெண்டு.......என்று முடிவில்லாமல் செய்துகொண்டே போகிறது.....
பணம் பந்தியிலே.....குணம் குப்பையிலே.....
No comments:
Post a Comment