Tuesday 3 March 2015

வலி


நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொது என் நண்பர் ஒருநாள் தீடிரென்று விபத்தில் தன வலது காலை முட்டி வரை இழந்துவிட்டார். ஆனால் அவர் கையை இழக்கவில்லை. ஆம் அவர் தன் தன்னம்பிக்கையை சிறிது கூட இழக்கவில்லை. தற்போது அவர் செயற்கை கால் பொருத்தி இருக்கிறார். நன்றாக ஓடி, ஆடி விளையாடி பின் படித்து நல்ல தொழில் செய்துகொண்டிருக்கும் வேளையில் அவர் தன் காலை இழந்தார். திருமணம் ஆன பிறகே இந்த விபத்து நடந்தது. தன்னுடைய கால் இழப்பு தன் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டது. என் நண்பர் அந்த உடல் வலி மற்றும் மன வழியில் இருந்து மீண்டு அதனை பொருட்படுத்தாமல், யாரிடம் புலம்பாமல், தன் வாழ்க்கையில் போராடி தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இன்றும் அவருடைய நடை வீர நடை, கம்பீரமான பேச்சு, கண்களில் தனம்பிக்கை தாண்டவமாடுகிறது. தெளிவான பேச்சு. தன்னை பற்றி யாரிடமும் புலம்பாமல் உழைப்பில் கவனம் செலுத்தி வாழ்ந்து வருகிறார்.
                                         இவர் கடந்து வந்த பாதையில் இவர் மிக வேகமாகவும், சிறு சிறு தவறுகளும் செய்ததும் இவர் நண்பர்கள் அறிந்ததே. இவர் தற்போது படும் வேதனையை இவர் நண்பர்கள் பலர் உணர்ந்தபாடில்லை. நண்பர்கள் இவரின் பழைய குணத்தையே நினைத்து பழகி வருகின்றனர்.
                                        இந்த உலகத்தில் ஒரு மனிதன் சிறந்த வாழ்க்கை வாழ அவனுக்கு அடிப்படையாக தேவை தன்னம்பிக்கையே. இந்த நண்பரிடம் தன்னம்பிக்கை ஏராளமாக இருந்தாலும் அவரும் மனித பிறவி தானே. அவருக்கு தேவை (moral support )மன ரீதியான ஆதரவு, உற்சாகபடுத்துதல். இந்த ஆதரவு முதலில் அவர் குடும்பத்தில் இருந்து தான் கிடைக்கவேண்டும்.  
இது போல பாதிக்கப்பட்ட மனிதருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அவரின் குடும்ப உறுப்பினர் அவரை குறை கூறாமல் ஆறுதல் அளிக்கவேண்டும். காலில் வலி, மனதில் வலி, பொருளாதார தட்டுபாடு, நண்பர்கள் ஏமாற்றம், குடும்பத்தின் புரியாத நிலை ஆகிய இத்தனையும் ஒரு மனிதனால் தாங்கவே முடியாது. இவருக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும். இது போல் தன்னம்பஈகையான மனிதனை நீ சாதிப்பாய், உன்னால் ஜெயிக்க முடியும் என்று நண்பர்களும், உறவினர்களும் அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறி உற்சாகபடுத்தி வந்தாலே அவர் நிச்சயம் ஒரு நாள் வாழ்க்கையில் சாதிப்பார். அது மட்டுமல்லாமல் இவரை சார்ந்தோர் இவருக்கு தன்னம்பிக்கையை மேலும் மேலும் கொடுக்க கொடுக்க இவர் மிக சிறந்த மனிதராகவும் திகழ்வார். இவரை போல் எங்காவது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை அவர் குடும்பத்தினர் வருத்தபட விடாமல் பக்கபலமாக பார்த்துகொள்ளுங்கள்குடும்பத்தில் தேவைகள் அதிகமாக இருந்தாலும்   குடும்பத்தலைவனின் இந்த தீடிர் விபத்தை, அந்த வழியை புரிந்துகொண்டு அந்த நிலைக்கு ஏற்றார்போலே வாழ்க்கையை நடத்துவதே ஒரு சிறந்த குடும்பமாகும். பாதிக்கப்பட்ட மனிதன் பெரும்பாலும் தன் கவலையை யாரிடமாவது புலம்பி கொண்டே வாழ்க்கையை கழிப்பான். அப்படியிருக்க தன் குறையை யாரிடமும் புலம்பாமல் தன்னம்பிக்கையுடன் வாழும் இவரை போல ஒருவர் வாழ்வது அந்த குடும்பத்துக்கு கிடைத்த மிக பெரிய சொத்தாகும்.
இக்காலத்தில் எல்லா வளமும் இருந்தும் ஏதாவது குறையை நினைத்து நினைத்து வாழ்ந்து 1கொண்டிருக்கின்றனர். வழியும், கஷ்டமும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். அடுத்தவரின் கஷ்டத்தையும், வலியையும் அவர் ஸ்தானத்தில் இருந்து பார்த்தல் தான் அந்த வலி நமக்கு புரியும். யாருடையா வாழ்க்கையும் எந்த நேரத்திலும் மாறலாம். ஆகவே அடுத்தவர் கஷ்டங்களை நம் கஷ்டங்களாக எண்ணுவதும் அடுத்தவர் இன்பத்தை பொறாமை கொள்ளாமல் நம் சந்தோஷமாக எண்ணுவதும் நல்ல வாழ்க்கை நெறியாகும்.
" ஒருவரின் உடல் வலிக்கு பயன்படுவது மருந்தாகும்
  ஒருவரின் மன  வலிக்கு  உதவுவது அன்பும், ஆறுதலான வார்த்தையும் தான் ".

                                                           வாழ்க்கையில் தீடிரென்று உடலில் குறை ஏற்பட்ட மனிதர்கள் யாராய் இருந்தாலும் சோர்ந்து விடாதீர்கள்.
"வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்".  இந்த திடீர் கவலையினால் வாழ்வினை நொந்து தீய பழக்கத்திற்கு அடிமை ஆகிவிடவேண்டாம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனித படிப்பிக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். உங்களிடம் மறைந்திருக்கும் திறமையை கண்டுபிடித்து அதன் மேல் ஆழ்ந்த கவனம் செலுத்தி, நம்பிக்கையுடன் அந்த திறமையை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். உலகத்தில் சாதித்த ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் அவனுடைய தன்னம்பிக்கையே மூல காரணமாக இருந்து வந்துள்ளது. நீங்கள் நேர்மையுடனும், விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வந்தால் நிச்சயம் ஒரு நாள் இந்த உலகமும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் உங்கள் வளர்ச்சியை பார்த்து வியந்து போவது உறுதியாகும்.

வாழ்க வளமுடன்


No comments:

Post a Comment