ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்ணடிமை... உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகள் நடந்து வந்தன.. பிறகு சிறிது சிறிதாக நிலைமை மாறி காந்தி சொன்ன பெண்கள் எப்போது இரவு நேரத்தில் நகையெல்லாம் போட்டுகொண்டு பயம் இல்லாமல் போகிறார்களோ அன்று தான் சுதந்திரம் என்பதை தற்போது IT வேலைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இரவில் சென்று பணிபுரிவதை பார்க்கிறோம்... இதே போல் பெண்ணுக்கு இருக்கும் கற்ப பையை காரணம் காட்டி ஆண்கள் பெண்கள் தான் கருத்தடை செய்யவேண்டும் என்று காலம் காலமாக பெண்ணை அடிமை படுத்தும் வழக்கத்திலே பெண்களுக்கு தான் கருத்தடை செய்யவேண்டும் என்ற முறையிலே வாழ்ந்தனர். தற்போது பெண்களில் மேலை நாட்டு கலாச்சாரத்தில் இந்த நிலை பெண்களுக்கு வந்துவிட்டது.அங்கு ஆண்களும் கருத்தடை செய்து கொள்கின்றனர். ஆனால் அங்கெல்லாம் கூடவே பெண்கள் வாழும் முறையும் பெரும்பாலும் சீரழிந்து விட்டது. நம் நாட்டில் பெண்கள் அடிமைகளாய் இருந்த காலத்தில் பெண்களுக்காக குரல் கொடுக்கும் தைரியம் பெண்களுக்கு இல்லை. ஆனால் தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் பெண்கள், உயர் பதவியை வகிக்கும் பெண்கள் , அரசியலில் முதன்மையாய் விளங்கும் பெண்கள், கார், பஸ் , விமானம், ரயில், மோட்டார் பைக் போன்ற வாகனங்களை ஓட்டும் பெண்கள், IT யில் அதிகாரிகளாக பணிபுரியும் பெண்கள் நினைத்தால் , மருத்துவராக பணிபுரியும் பெண்கள் நினைத்தால், ஆசிரியராக பணிபுரியும் பெண்கள் நினைத்தால், சமூக சேவகியாக விளங்கும் பெண்கள் நினைத்தால்....இன்னும் சொல்லி கொண்டே போகலாம் (விகிதாசாரத்தில் குறைவாக இருந்தாலும்) எப்படி உடன்கட்டை நிலை மாறியதோ - எப்படி பெண்களின் ஆடை பாவாடையிலிருந்து ஜீன்ஸ், சுடிதார் அணியும் நிலை மாறியதோ - மேடையில் பேசும் திறனில் மாறியதோ - எப்படி உங்களை போல் பெண்களின் முற்போக்கு சிந்தனை மாறியதோ - ஆட்சியில் மாறியதோ - பனி புரியும் நேரம் இரவாக மாறியதோ, எப்படி சினிமா இயக்குனராக பெண் இயக்கம் மாறியதோ, எப்படி திரைபடத்தில் பெண் கவிஞர் கவிதை எழுதுவதில் மாறியதோ, ஆண்கள் சில்மிஷம் செய்தால் அவர்களை தட்டி கேட்கும் தைரியத்தில் மாறியதோ, அதே போல் நிச்சயம் இந்த கருத்தடை விஷயமும் நிச்சயம் ஒரு நாள் மாறும்.. ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம்... இது வெறும் வார்த்தையிலே அன்று
ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் .... பெண்கள் ஒன்றுபட்டால் இன்று
No comments:
Post a Comment