Thursday, 19 March 2015

கடவுள்


எனக்கு தெரிந்தவை...................... 
பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஓரறிவு தாவரம் முதற்கொண்டு ஆறறிவு மனிதன் வரை அனைத்து உயிரினங்களும் கடவுள் என்னும் மஹாசக்தி மூலம் படைக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.....
இன்றோ கடவுளை மனிதன் படைக்கிறான்.....
கடவுளை தரிசிக்க சாதா விலை, ஸ்பெஷல் விலை என்று நிர்ணயிக்கிறான்....
கடவுளை உருவாக்குகிறான்.....
கடவுளில் உயர்ந்த கடவுள் எது தாழ்ந்த கடவுள் எது என்று பிரித்து பார்க்கின்றான்... கடவுளுக்கு விளம்பரம் தேடுகிறான் .....
கடவுளிடமே வியாபாரம் பேசுகிறான்.... 
கடவுளின் சக்தியை அளக்கிறான் ...
கடவுளுக்குள்ளேயே போட்டி போடுகிறான்.....
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் பூமியின் அளவு என்பது பெருங்கடலில் மிதக்கும் ஒரு சிறு கடுகு போன்றது. பூமியே கடுகு என்றால் அதில் மனிதன் எம்மாத்திரம். பிரபஞ்ச ரகசியங்களில் இன்னும் ஒரு சதவிகிதத்தை கூட கண்டு பிடிக்க முடியாத இந்த மனிதன் இதை உணர்ந்தபாடில்லை. இவனுக்கு கடவுள் கொடுத்த வர பிரசாதமாகிய ஆறு அறிவு மூலம் அவனே கடவுளாகவும் தன்னை உருவாக்கிகொள்ள முயற்சி செய்கின்றான்.
கடவுள் ஒரு மஹாசக்தி..... தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.. 
உன் மனதை அமைதி படுத்தி உனக்குள்ளே உயிர் சக்தியில் இறைவன் இருப்பதை ஆராய்ந்து உணர முயற்சிக்கும் ஒரு கருவியே ஆறாம் அறிவு....
'
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகின்றான் ஞான தங்கமே '
பெரும்பாலான கோயில்களில் பொறித்திருக்கும் வாசகம் "அஹம் பிரம்மாஸ்மி " இறைவன் உனக்குள்ளே இயங்குகிறான். 


No comments:

Post a Comment