Wednesday 18 March 2015

முத்திரை



RUBBER STAMP : -

தயவு செய்து யாருக்கும் முத்திரை குத்தி விடாதீர்கள். முத்திரை என்பது நிரந்தரமான ஒன்று. ஆனால் வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாத ஒன்று. உதாரணமாக ஒருவன் சிறு வயதில் நிறைய தவறுகள் செய்தவன் என்று வைத்துகொள்வோம் தற்போது தன் சுய அனுபவங்களால் அவன் திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பான். அவனை சிறு வயதில் பார்த்தது போலவே பார்ப்பது நீங்கள் செய்யும் மிக பெரிய தவறு. சினிமா துறையை எடுத்து கொண்டால் பலர் சிறு வயதில் தவறு செய்து பிறகு திருந்தி பல பேருக்கு உதவி செய்து வருகின்றனர். மகான்கள் சிலரும் இவ்வாறு மனம் மாறியவர்களே. பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறு வயதில் ஆங்கில புலமை இல்லாமல் அனைவராலும் பரிகசிக்கப்பட்டு பின்னர் உலகம் முழுதும் பாராட்டப்பட்டவர். விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பல பேரால் அவமானபடுத்த பட்டு இன்று அனைவரும் இரவில் வெளிச்சத்தில் இருப்பதற்கு வழி வகுத்தவர் என்பதை நாம் மறந்து விட கூடாது. நிறைய மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாது பின்னர் 12 ஆம் வகுப்பில் மிக சிறந்த மதிப்பெண்கள் பெறுவதை நம் வாழ்க்கையில் பார்த்து கொண்டிருக்கிறோம். " மாற்றம் நிறைந்தது மனித வாழ்க்கை - மாறாதவன் மாண்டு போவான் " என்ற வாசகத்திற்கு ஏற்ப பெரும்பாலான மனிதர்கள் தன் வாழ்க்கை பாடத்தால் சுய மாற்றம் (SELF REALISATION ) பெறுகின்றனர். இது போல மனிதர்கள் இன்று சிறந்த சேவை செய்தாலும், உயர்ந்த இடத்தை வந்து அடைந்தாலும் இவர்களுடைய உறவினர்களும் - நண்பர்களும் பழைய கதையையே பேசி கொண்டு இது போல மனம் மாறி உயர்ந்த இடத்தை அடைந்தவர்களை டீ கடையிலும் WINE ஷாப்பிலும் அமர்ந்து கொண்டு இவன் அந்த காலத்தில் இப்படி என்னுடன் இருந்தான் அப்படி இருந்தான் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது வீண் வேலை. யாராயிருந்தாலும் இந்த கால கட்டத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பது தான் முக்கியம். நாம் சிறு வயதில் ஆடை அணியாமல் விளையாடி கொண்டிருந்தோம். தற்போது FASHION DESIGNER ஆக பணிபுரிகிறோம் என்றால் இந்த நேரத்தில் அந்த பைழய முத்திரையை பற்றி பேசுவது நாகரீகமான விசையம் அன்று. இவுலகத்தில் தவறு செய்யாதவர்கள் ஒருவரும் நிச்சியம் இல்லை. ஆகவே ஒருவர் நல்ல பாதையில் சென்று கொண்டிருக்கும் பொது அவரை யாரும் பழைய கணக்கை வைத்து எடை போட்டு - தப்பு கணக்கு போட்டு உங்கள் காலத்தை வீணடிக்காமல் நீங்களும் முன்னேற வழி வகுத்து கொள்ளுங்கள். நீங்கள் அடுத்தவரை பற்றி குறை கூறும் வேளையில் உங்களையும் சிலர் கூறி கொண்டு தான் என்பதை மறந்து விடாதிர்கள். " உளி படாத கல் சிற்பம் ஆகாது " அது போல தவறு செய்யாத ஒருவன் சாதிக்க முடியாது. எப்படி ஒரு பாறையில் தேவை இல்லாத கற்களை ஒதுக்கினால் சிற்பம் உருவாகிறதோ அது போல ஒருவனிடத்தில் இருக்கும் தேவை இல்லாத பழக்கங்களை அவன் ஒதுக்கி கொள்ளும்போது அவனும் சிற்பம் போல சாதனையாளன் ஆகிறான். நடந்ததை மற - நடப்பதை நினை.

No comments:

Post a Comment